கபிரியேல் தேவதூதர்

கபிரியேல் (எபிரேயம்:גַּבְרִיאֵל, இறைவன் என் பலம்; அரபு மொழி: جبريل, Jibrīl or جبرائيل Jibrāʾīl) என்பவர் ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையின்படி, கடவுளின் செய்தியை மனிதர்களுக்கு கொண்டு செல்லும் தேவதூதர் ஆவார்.

கபிரியேல்
அதிதூதர்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம்
திருவிழாசெப்டம்பர் 29 (தூய மிக்கேல் மற்றும் தூய ரபேலோடு சேர்ந்து) மரபு வழி திருச்சபைகளில்: நவம்பர் 8

கிறித்தவ நம்பிக்கைகள்

தொகு

இவரைப்பற்றிய குறிப்பு முதன் முதலில் காணக்கிடைப்பது தானியேல் நூலில் ஆகும். லூக்கா நற்செய்தியில் இவர் திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பெற்றோர்களுக்கு அவர்களின் பிறப்பை முன் அறிவிப்பதாய் அமைகின்றது. கத்தோலிக்க கிறித்தவர்கள் இவரை அதிதூதர் என அழைக்கின்றனர்.[1]

இசுலாமிய நம்பிக்கைகள்

தொகு

இசுலாமிய சமயத்தில் இவர் ஜிப்ரீல் என்று அரபு மொழியில் அழைக்கப்படுகிறார்.[2] இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களான நபிமார்களுக்கு கொண்டு செல்பவர் என புனித குர்ஆன் குறிப்பிடுகின்றது.[3] இவர் இயேசுவின் தாய் மரியாளுக்கு இயேசு பிறக்கும் நற்செய்தியை இறைவனிடம் இருந்து மரியாளிடம் கொண்டு சேர்த்ததாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இசுலாமிய நம்பிக்கையில் இவர் தான் அனைத்து இறைத்தூதர்களுக்கும் இறை செய்தியை கொண்டு சேர்த்ததாக நம்பப்படுகிறது. மேலும் புனித குர்ஆன் இவர் மூலமாகவே முகமது நபியவர்களுக்கு அருளப்பட்டது எனபது இசுலாமிய நம்பிக்கை.[4]

பிற நம்பிக்கைகள்

தொகு

சிலசமயங்களில், குறிப்பாக புது யுக இயக்கத்தினரால் பெண்பாலிலும் இவர் குறிப்பிடப்படுகிறார்.

 
கன்னி மரியாளுக்கு கபிரியேல் தூதுரைகின்றார்

பஹாய்

தொகு

இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களுக்கு கொண்டு செல்பவர் எனபது பஹாய் நம்பிக்கை. [5]

மேற்கோள்கள்

தொகு
  1. S. Vernon McCasland, "Gabriel's Trumpet", Journal of Bible and Religion 9:3:159–161 (August 1941) JSTOR 1456405
  2. Ali, Maulana Muhammad; Gallegos, Christopher (1936). The Religion of Islam. Lahore: eBookIt.com. p. 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781934271186.
  3. [திருக்குர்ஆன் 97:3]
  4. "தமிழ் குர்ஆன் இணையதளம்". Archived from the original on 2020-09-26. பார்க்கப்பட்ட நாள் 2017-02-06.
  5. [1] "The Kitáb-i-Íqán PART ONE". BAHA'I REFERENCE LIBRARY. Retrieved 2014-09-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிரியேல்_தேவதூதர்&oldid=3594251" இலிருந்து மீள்விக்கப்பட்டது