90 அடி சாலை

இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லும் ஒரு சாலை

90 அடி சாலை (90 Feet Road) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலம் சிறிநகரில் இருக்கும் ஒரு சாலையாகும். சிறிநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சிறிநகர் மற்றும் லடாக் நகரங்களை இணைக்கும் தெற்கு பகுதி 90 அடி சாலை என அழைக்கப்படுகிறது. [1] சிறிநகர் லால் சௌவுக் எனப்படும் செஞ்சதுக்கத்திற்கு 11 கி.மீ வடக்கிலுள்ள வணிக மையம் சௌரா பகுதியில் 90 அடி சாலை தொடங்குகிறது. [2] இங்கிருந்து மேலும் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு வடக்கு நோக்கிச் செல்லும் இச்சாலை காந்தர்பல் நகரிலுள்ள பந்தாச்சு பகுதியில் முடிவடைகிறது. இதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலை எண் 1டி கிழக்கு நோக்கி வளைந்து லே வரை செல்கிறது.

90 அடி சாலை
90 Feet Road
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:7 km (4.3 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சௌரா, ஸ்ரீநகர் மாவட்டம்
முடிவு:பந்தாச்சு, காந்தர்பல் மாவட்டம்
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:சௌரா, இலாகி பாக் (புச்போரா), அகமது நகர், பந்தாச்சு
நெடுஞ்சாலை அமைப்பு

பெயருக்கேற்றவாறு சாலையின் அகலமும் 90 அடி (27 மீ) அகலம் கொண்டது என்ற உண்மையை பிரதிபலிக்கிறது. உள்ளூர்வாசிகள் இதை நம்மத் என்று அழைக்கிறார்கள். காசுமீரி மொழியில் நம்மத் என்பதன் பொருள் "தொண்ணூறு" என்பதாகும்.

வரலாறு

தொகு

21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அங்கிருந்த களிமண் திட்டுகளை அகற்றுவதன் மூலம் இந்த சாலை கட்டப்பட்டது. நகரத்தின் மிகவும் மதிப்புமிக்க சாலைகளில் ஒன்றாக 90 அடி சாலை கருதப்படுகிறது.

90 அடி சாலையின் கிழக்கே உள்ள வொன்டாபோவனின் அருகிலுள்ள அவந்தா பவன், [3] ராணி அமிர்தா பிரபாவால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று தளமாகும். அமிர்தாவின் கணவர் மேக்வகானா காசுமீரின் புத்த மன்னர்களில் ஒருவராக இருந்தார். [4] செர்-இ-காசுமீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் போன்ற மருத்துவமனைகளுக்கு மருத்துவ அவசரம் காரணமாகப் பயணிக்கும் காந்தர்பால் குடியிருப்பாளர்களுக்கு 90 அடி சாலை மிகவும் விரைவான ஒரு பயனுள்ள போக்குவரத்து வசதியை அளிக்கிறது.

மேலும் சில சாலைகள்

தொகு

"90 அடி சாலை" என்ற பெயர் சிறிநகருக்கு மட்டும் தனித்துவமானது அல்ல; மும்பையின் தாராவி சுற்றுப்புறத்திலும் இதே அகலத்தில் ஒரு சாலை உள்ளது. மேலும் இதே பெயரில் இந்தியாவில் பல சாலைகள் உள்ளன. [5]

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "wikimapia". wikimapia.org. பார்க்கப்பட்ட நாள் 2014-08-07.
  2. "distancebetween.com: The Leading Distance Between Site on the Net". distancebetween.com. Archived from the original on 2014-08-12. பார்க்கப்பட்ட நாள் 2014-08-07.
  3. http://www.wikimapia.org/
  4. "Awanta Bhawan". பார்க்கப்பட்ட நாள் 7 August 2014.
  5. Google search for "90 Feet Road"
"https://ta.wikipedia.org/w/index.php?title=90_அடி_சாலை&oldid=3622670" இலிருந்து மீள்விக்கப்பட்டது