வானியல் அலகு

(AU இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வானியல் அலகு (astronomical unit, AU அல்லது ua) என்பது ஒரு நீள அலகு. இது அண்ணளவாக பூமியில் இருந்து சூரியன் வரையான தூரத்திற்குச் சமமாகும். வானியல் அலகின் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நீளம் 149 597 870 691 ± 30 மீட்டர்கள் (150 மில்லியன் கிலோமீட்டர்கள் அல்லது 93 மில்லியன் மைல்கள்) ஆகும்.

1976 இல் பன்னாட்டு வானியல் கழகம் வானியல் அலகுக்கான புதிய வரவைத் தந்தது. இதன் படி, 365.2568983 நாட்கள் சுற்றுக்காலம் கொண்டதும், சூரியனின் வட்டப் பாதையில் சுழலும் புறக்கணிக்கத்தக்க திணிவு கொண்டதுமான துணிக்கை ஒன்றிலிருந்து சூரியனின் நடுப் புள்ளி வரையுமான தூரம் ஒரு வானியல் அலகு என வரையறுக்கப்பட்டது. இந்த வரைவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரித் தூரத்தை விட சிறிது குறைவானதாகும்.

எடுத்துக்காட்டுகள்

தொகு
  • பூமி, சூரியனில் இருந்து 1.00 ± 0.02 AU தூரத்தில் உள்ளது.
  • சந்திரன் பூமியில் இருந்து 0.0026 ± 0.0001 AU தூரத்தில் உள்ளது.
  • செவ்வாய் சூரியனில் இருந்து 1.52 ± 0.14 AU தூரத்தில் உள்ளது.
  • வியாழன் சூரியனில் இருந்து 5.20 ± 0.05 AU தூரத்தில் உள்ளது.
  • புளூட்டோ சூரியனில் இருந்து 39.5 ± 9.8 AU தூரத்தில் உள்ளது.

தூரங்கள் இங்கு சராசரித் தூரங்கள் ஆகும்.

சில மாற்றீடுகள்:

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானியல்_அலகு&oldid=3311355" இலிருந்து மீள்விக்கப்பட்டது