பாரஸ்ட் கம்ப்
பாரஸ்ட் கம்ப் (Forrest Gump) 1994 இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.இத்திரைப்படம் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான டொம் ஹாங்கின் நடிப்பில் வெளிவந்தது.இத்திரைப்படம் 1984 இல் வெளிவந்த நாவல் பாரஸ்ட் கம்பின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படம் 13 ஆஸ்கார் விருதுகளிற்குப் பரிந்துரைக்கப்பட்டு 6 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.
பாரஸ்ட் கம்ப் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ராபெர்ட் செமெக்கிஸ் |
தயாரிப்பு | வெண்டி பைனர்மன் ஸ்டீவ் டிஷ் ஸ்டீவ் ஸ்டார்கி |
கதை | வின்ஸ்டன் கிரூம் (புதினம்), எரிக் ராத் (திரைக்கதை) |
இசை | அலன் சில்வெஸ்ரி |
நடிப்பு | டொம் ஹாங் ரொபின் விரைட் பென் ஹாரி சினைஸ் மைகேல்டி வில்லியம்சன் சால்லி பீல்ட் |
ஒளிப்பதிவு | டான் பர்ஜஸ் |
படத்தொகுப்பு | ஆர்தர் ஷிமிட் |
விநியோகம் | பாராமவுன்ட் பிக்சர்கள் |
வெளியீடு | சூலை 6, 1994 |
ஓட்டம் | 142 நிமிடங்கள் (அமெரிக்கா) / 136 நிமிடங்கள் (ஐரோப்பா) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | US$ 55 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | US$ 677,387,716[1] |
கதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மன நோயாளியாகக் கருதப்படும் பாரஸ்ட் கம்ப் (டொம் ஹாங்) தனது சிறுவயதிலிருந்து காதலித்து வந்த ஜென்னி என்னும் பெண்ணைப் பற்றி பேருந்து நிலையத்தில் வந்து போகும் அனைவருக்கும் கூறிக்கொண்டே இருக்கின்றார்.சில பயனர்கள் இவரின் கதையைக் கேட்டு விட்டு செல்லவும் செய்கின்றனர்.மேலும் அவர் தனது சிறு வயது முதலே ஒரு பெண் தோழி இருந்தவரென்றும் தனக்கு இருந்து வந்த ஊனத்தை மறையச் செய்தவரும் தனது காதலி என்றும் அவரைப் பற்றி புகழ்ந்து கூறும் பாரஸ்ட் கம்ப் தனது காதலி அவரனின் வளர்ப்புத் தந்தையினால் கற்பழிக்கப்படுவது தெரிந்தும் அவரது காதலியின் மீதிருந்த காதல் காரணத்தால் அவரைப் பல முறை பின் தொடர்கின்றார்.இருந்தும் விலைமாதுவாக தன் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஜென்னி பின்னர் வைரஸ் நோயால் அவதிப்படுவதையும் பொருட்படுத்தாது அவரின் அழைப்புற்கேற்ப அவரின் நலம் அறியப் புறப்படுகின்றார் பாரஸ்ட் கம்ப். மேலும் தங்களது குழந்தையினைப் பராமரிக்கும் பொருட்டு ஜென்னியினைத் திருமணம் செய்து கொள்கின்றார் பாரஸ்ட் கம்ப். பிற்பாடு ஜென்னி நோய் முற்றி இறப்பதும், அவரது கல்லறையில் பாரஸ்ட் ஏங்குவதும், தமது குழந்தையை நன்றாக வளர்ப்பதைப பற்றி பாரஸ்ட் தனியே உரையாடுவதுமாக திரைக்கதை நீள்கிறது. இறுதிக் காட்சியில் தன் மகனை பள்ளிப் பேருந்தில் அனுப்பி விட்டு பாரஸ்ட் சாந்தமாக அமர்ந்திருப்பதுடன் கதை இனிதே நிறைவடைகிறது.
விருதுகள்
தொகுவென்றவை
தொகு- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
தொகு- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
- சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசைக்கான அகாதமி விருது
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 "Forrest Gump (1994)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் July 1, 2009.