ஃபிஃபா ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர்

(ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர் என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கு ஃபிஃபாவினால் வழங்கப்படும் பரிசாகும். இது 1991இல் உலகின் சிறந்த ஆண் கால்பந்து விளையாட்டு வீரர்களுக்காக நிறுவப்பட்டது. இது உலகளவில் பல்வேறு பயிற்றுனர்களாலும் பன்னாட்டு அணித்தலைவர்களாலும் வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்றுனருக்கும் முறையே ஐந்து, மூன்று ஒரு புள்ளிகள் மதிப்புள்ள மூன்று வாக்குகள் தரப்படுகின்றன;வெற்றி பெற்றவர்கள் தாங்கள் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறார்கள்.

சூலை, 2010-இல் தங்கப் பந்து (பிஃபா) விருதை உருவாக்கியதற்கான ஒப்பந்தத்துடன் ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர். இடம்: ஜோகானஸ்பேர்க்
ஐந்து முறை அடுத்தடுத்து உலகின் சிறந்த வீரர் பட்டத்தை பெற்றவர்

ஐரோப்பாவில் வாழும் பிரேசிலிய விளையாட்டாளர்களே இந்த விருதை 18இல் 8 முறை பெற்றுள்ளனர். அடுத்ததாக பிரான்சு மூன்று முறை வென்றுள்ளது. தனிநபர்களைப் பொறுத்தவரை பிரேசில் நாட்டு வீரர்கள் ஐந்து முறையும் இத்தாலியும் போர்த்துக்கல்லும் தலா இருமுறையும் வென்றுள்ளன.[1][2]

இந்த விருது பெற்ற மிக இளைய விளையாட்டாளராக ரொனால்டோ உள்ளார். இவர் 1996இல் தமது 20வது அகவையில் வென்றார்.[3] ரொனால்டோ மீண்டும் 1997இலும் 2002இலும் வென்றுள்ளார். இவரும் ரொனால்டினோவும் அடுத்தடுத்து இருமுறை வென்றுள்ளனர். ரோனால்டோவும் ஜீனடின் ஜிதேனும் மூன்று முறை வென்றுள்ளனர். இந்த விருதைப் பெற்ற மிகவும் முதிய விளையாட்டாளராக பாபியோ கன்னவரோ உள்ளார். இவர் 2006இல் தமது 33வது அகவையில் இவ்விருதை வென்றார்.[4]

2010இல் ஃப்ரென்ச் கால்பந்தின் பாலோன் தி'ஓர் மற்றும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளும் ஒன்றிணைத்து ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த ஆண் விளையாட்டாளருக்கு தங்கப் பந்து (பிஃபா) வழங்கப்படுகிறது.[5]

2001ஆம் ஆண்டில் மகளிருக்கான விருதுசேர்க்கப்பட்டது. மகளிரில் தனிநபர் விருது பெற்றவர்கள் மிகக் குறைவே. இதுவரை ஆறு பேருக்கு —இரு அமெரிக்கர்கள், இரு செருமானியர்கள், ஒரு பிரேசிலியர், ஒரு சப்பானியர்—இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 2011இல் ஓமரெ சவாவிற்கும் 2012இல் அபி வாம்பாச்சிற்கும் 2013இல் நதீன் அங்கெரருக்கும் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மார்த்தா ஐந்து முறை அடுத்தடுத்து வென்றுள்ளார். பிர்கிட் பிரின்சு மூன்று முறை அடுத்தடுத்தும் மியா ஆம் அடுத்தடுத்து இருமுறையும் வென்றுள்ளனர். மிகவும் முதிய அகவையில் வென்றவராக 35 அகவையில் வென்ற அங்கெரர் உள்ளார்; ஒரு கோல் காப்பாளராக இவ்விருதைப் பெறுவதும் இவரே ஆவார். மிகவும் இளைய அகவையில் மார்த்தா 2006இல் தமது 20வது அகவையில் வென்றுள்ளார்.

இதனையும் காண்க

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. "FIFA World Player" பரணிடப்பட்டது 2012-10-25 at the வந்தவழி இயந்திரம். FIFA.com. Retrieved 1 April 2013
  2. "FIFA Awards". RSSSF.com. Retrieved 1 April 2013
  3. "Brazil legend Ronaldo retires from football" BBC. Retrieved 17 November 2013
  4. "Cannavaro discusses highs and lows" பரணிடப்பட்டது 2013-12-16 at the வந்தவழி இயந்திரம். Football Federation Australia. Retrieved 18 November 2013
  5. "FIFA.com - The FIFA Ballon d'Or is born". Archived from the original on 2011-04-30. பார்க்கப்பட்ட நாள் 2014-01-17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-18. பார்க்கப்பட்ட நாள் 2014-01-17.