பிரீடா பின்டோ
பிரீடா செலினா பிண்டோ (Freida Selena Pinto பிறப்பு அக்டோபர் 18,1984) ஓர் இந்திய நடிகை ஆவார். பெரும்பான்மையாக அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படங்களில் நடித்துள்ளார். மஹாராட்டிராவில் பிறந்து வளர்ந்த இவர், இளம் வயதிலேயே ஒரு நடிகையாக வேண்டும் என்று தீர்மானித்தார். மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் மாணவராக இருந்தபோது தன்னார்வ நாடகங்களில் பங்கேற்றார். பட்டம் பெற்ற பிறகு, இவர் ஒரு மாதிரியாகவும் பின்னர் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.
பிரீடா பின்டோ Freida Pinto | ||||||
---|---|---|---|---|---|---|
நவம்பர் 2008இல் எடுக்கப்பட்ட படம் | ||||||
பிறப்பு | அக்டோபர் 18, 1984 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | |||||
தொழில் | நடிகை | |||||
நடிப்புக் காலம் | 2006–தற்போது வரை | |||||
|
சிலம்டாக் மில்லியனர் என்ற திரைபப்டத்தில் அறிமுகமானதன் மூலம் பிண்டோ பரவலாக அறியப்பட்டார். இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக எஸ்ஏஜி விருதையும் சிறந்த துணை நடிகைக்கான பாஃப்டா விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். மிரால் (2010) த்ரிஷ்ணா (2011), டெசர்ட் டான்சர் (2014) ஆகிய படங்களில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[1] ரைஸ் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் (2011) என்ற அறிவியல் புனைகதை திரைப்படத்திலும், இம்மார்டல்ஸ் (2011) எனும் காவிய கற்பனை அதிரடி திரைப்படத்திலும் வணிக ரீதியான வெற்றியைக் கண்டார். பிண்டோவின் பிற குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் யூ வில் மீட் எ டால் டார்க் ஸ்ட்ரேஞ்சர் (2010) லவ் சோனியா (2018) ஹில்பில்லி எலிஜி (2020), மிஸ்டர் மால்கம் 'ஸ் லிஸ்ட் (2022) ஆகியவை அடங்கும்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுபிண்டோ 1984 அக்டோபர் 18 அன்று பம்பாயில் (இப்போது மும்பை) மகாராட்டிராவின் கர்நாடகா மங்களூரைச் சேர்ந்த மங்களூர் கத்தோலிக்கப் பெற்றோருக்கு பிறந்தார்.[2] இவரது தாயார் சில்வியா பிண்டோ மேற்கு மும்பை கோரேகானில் உள்ள புனித ஜான்ஸ் யுனிவர்சல் பள்ளியின் முதல்வராகவும், அவரது தந்தை ஃபிரடெரிக் பிண்டோ மேற்கு மும்பை பாந்த்ரா உள்ள பாங்க் ஆஃப் பரோடாவின் மூத்த கிளை மேலாளராகவும் இருந்தார்.[a][4][5][6] இவரது மூத்த சகோதரி சரோன் என்டிடிவி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.[7]
நடிப்பு வாழ்க்கை
தொகு2008-2010: தொடக்கங்களும் முன்னேற்றங்களும்
தொகு2007 ஆம் ஆண்டில், பின்டோவின் மாதிரித் தொழில் நிறுவனம் டேனி பாயிலின் திரைப்படமான ஸ்லம்டாக் மில்லியனர் (2008) திரைப்படத்தில் கதாநாயகிக்கான தேர்விற்காக இவரையும் மற்ற ஆறு நபர்களையும் தேர்வு செய்தது. [8] [9] ஆறு மாத விரிவான சோதனைகளுக்குப் பிறகு, தேவ் படேல் நடித்த முக்கியக் கதாபாத்திரமான ஜமால் காதலிக்கும் லத்திகா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கத் தேர்வானார்.[10] தயாரிப்புக்குப் பிந்தைய கட்டத்தில், மும்பையில் உள்ள பேரி ஜான் ஆக்டிங் படமனையில் நடிப்புப் பயிற்சியில் கலந்து கொண்டார். [7] நடிப்பின் "தொழில்நுட்ப அம்சங்கள்" பற்றி பாடம் கற்பித்தாலும், "உண்மையான அனுபவத்தைப் பொறுத்தவரை, அங்கு சென்று உண்மையில் பங்கேற்பது போல் எதுவும் இல்லை... அதனால் எனக்கு பிடித்த நடிப்புப் பள்ளி ஆறு மாதம் டேனி பாயில் மேற்கொண்ட சோதனைத் தேர்வு தான்" எனக் கூறினார். [9]
2011–தற்போது வரை
தொகுபின்டோ 2011-இல் நான்கு திரைப்படங்களில் நடித்தார். முதலாவது அறிவியல் புனைகதை திரைப்படமான ரைஸ் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ், பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் தொடரின் மறுதொடக்கம் . [11] ஜேம்ஸ் ஃபிரான்கோ நடித்த முக்கிய கதாபாத்திரத்தை காதலிக்கும் முதன்மையான கரோலின் அரன்ஹா என்ற பாத்திரத்தில் நடித்தார். [12] [13] இவரது பாத்திரத்திற்கு தயாராவதற்கு, இவர் ஆங்கில மானுடவியலாளர் ஜேன் குடாலின் வாழ்க்கையை ஆய்வு செய்தார். [14] இப்படம் உலகளவில் US$481.8 வசூலித்தது; இது ஏப்ரல் 2016 வரை அவரது அதிக வசூல் செய்த படமாக உள்ளது. [15]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபின்டோ தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, அவரது விளம்பரதாரராக இருந்த ரோஹன் அன்டாவோவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவர் சனவரி 2009 இல் திருமண உறவை முடித்துக் கொண்டார் மற்றும் அவரது ஸ்லம்டாக் மில்லியனர் சக நடிகரான தேவ் படேலுடன் உறவுப் பொருத்ததில் இருந்தார்.[16] ஆறு வருட உறவுக்குப் பிறகு, 2014 டிசம்பரில் இந்த இணை சுமுகமாகப் பிரிந்தது.[17]
குறிப்புகள்
தொகு- ↑ Pinto on her Portuguese surname to Interview: "I come from Mangalore, which is in the southern part of India, where you have a big Catholic population. Some of them were forced into conversions by the British and Portuguese. So I may not necessarily have that kind of lineage. I could pretty much be a Hindu from India."[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Radish, Christina (2015-04-14). "Desert Dancer: Freida Pinto Talks Dance, Her Character, and Afshin Ghaffarian". Collider (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-01.
- ↑ "Woman behind success". The Tribune (Chandigarh). Indo-Asian News Service. 9 March 2009 இம் மூலத்தில் இருந்து 8 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151208165543/http://www.tribuneindia.com/2009/20090309/ttlife1.htm.
- ↑ "Freida Pinto's identity crisis". Stylist. 9 August 2011. Archived from the original on 4 April 2016. பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.
- ↑ "Slumdog has done India proud, says Freida's father". Daily News and Analysis. 23 February 2009. Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 25 April 2013.
- ↑ Blanks, Tim (25 July 2011). "Freida Pinto". Interview (magazine). Archived from the original on 29 July 2013. பார்க்கப்பட்ட நாள் 7 April 2013.
- ↑ "Freida Pinto wants to undergo DNA test to prove she is Indian". The Daily Telegraph. 25 July 2011. Archived from the original on 5 November 2013. பார்க்கப்பட்ட நாள் 7 April 2013.
- ↑ 7.0 7.1 D'Mello, Gerry (25 November 2008). "The Newest Star on the Mangalorean Horizon – Freida Pinto". Daijiworld Media. Archived from the original on 18 April 2009. பார்க்கப்பட்ட நாள் 25 November 2008. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "daj" defined multiple times with different content - ↑ "Woman behind success". The Tribune (Chandigarh). Indo-Asian News Service. 9 March 2009 இம் மூலத்தில் இருந்து 8 December 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151208165543/http://www.tribuneindia.com/2009/20090309/ttlife1.htm.
- ↑ 9.0 9.1 Sung, Helena. "Destiny's Child". Audrey (magazine) (February – March 2009). http://www.audreymagazine.com/index.php?element=cover_story&archive=409. பார்த்த நாள்: 29 April 2009.
- ↑ Hubert, Andrea (3 January 2009). "Desi mates". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 23 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923060851/http://www.theguardian.com/film/2009/jan/03/slumdog-millionaire-stars.
- ↑ Bagdadi, Danish (12 July 2014). "All 8 'The Planet of the Apes' Movies Ranked from Worst to Best". Daily News and Analysis இம் மூலத்தில் இருந்து 11 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151011055317/http://www.dnaindia.com/entertainment/comment-all-8-the-planet-of-the-apes-movies-ranked-from-worst-to-best-2001648.
- ↑ Joshi, Tushar (30 May 2012). "Freida's freed herself from desi stereotypes". தெ டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 29 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160629163339/http://timesofindia.indiatimes.com/nri/nri-entertainment/Freidas-freed-herself-from-desi-stereotypes/articleshow/13640190.cms.
- ↑ "Freida Pinto out of 'Planet of the Apes' sequel". மிட் டே. 4 June 2013. Archived from the original on 3 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015.
- ↑ Blair, Iain (4 August 2011). "Freida Pinto rises up in new 'Planet of the Apes'". Reuters. Archived from the original on 6 February 2018. பார்க்கப்பட்ட நாள் 13 February 2018.
- ↑ "Freida Pinto: Worldwide (Unadjusted)". Box Office Mojo. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Wloszczyna, Susan (29 March 2011). "Freida Pinto, Dev Patel: Like something out of a movie". USA Today இம் மூலத்தில் இருந்து 3 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203135636/http://usatoday30.usatoday.com/life/movies/news/2011-03-30-freidaside30_VA_N.htm.
- ↑ "Freida Pinto defies expectation for 'Dancer'". USA Today. 7 April 2015 இம் மூலத்தில் இருந்து 27 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160527000421/http://www.usatoday.com/story/life/movies/2015/04/06/desert-dancer-freida-pinto/25340953/.