தேவ் பட்டேல்

தேவ் பட்டேல் (ஆங்கில மொழி: Dev Patel) (பிறப்பு: 23 ஏப்ரல் 1990) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிலம்டாக் மில்லியனயர், தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல், சேப்பீ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தி நியூஸ் ரூம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

தேவ் பட்டேல்
Dev Patel at PaleyFest 2013.jpg
பிறப்பு23 ஏப்ரல் 1990 (1990-04-23) (அகவை 33)
லண்டன்
இங்கிலாந்து
ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரிட்டிஷ்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை

இவர் நடித்த சிலம்டாக் மில்லியனயர் என்ற திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்ததன் மூலம் மிகவும் பரிச்சியமான நடிகர் ஆனார். இந்தத் திரைப்படம் பல அகாதமி விருதுகளை வென்றுள்ளது.

ஆரம்பகால வாழ்க்கைதொகு

தேவ் பட்டேல் 23 ஏப்ரல் 1990ஆம் ஆண்டு லண்டன் இங்கிலாந்தில் பிறந்தார். இவரது தந்தை ராஜ் மற்றும் தாய் அனித ஆவார்கள். இவர் இந்திய நாட்டைச் சேர்ந்த குஜராத்தி இனத்தைச் சேர்ந்தவர். இவர் இந்து மத நம்பிக்கை உள்ளவர்.

திரைப்படங்கள்தொகு

சின்னத்திரைதொகு

  • 2007-2008: ஸ்கின்ஸ்
  • 2009: மிஸ்டர் லெவன்
  • 2012-2014: தி நியூஸ் ரூம்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவ்_பட்டேல்&oldid=3604644" இருந்து மீள்விக்கப்பட்டது