அகன்ற அலகு உள்ளான்
அகன்ற அலகு உள்ளான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கேலிடிரிசு
|
இனம்: | கே. பால்சினெலசு
|
இருசொற் பெயரீடு | |
கேலிடிரிசு பால்சினெலசு போண்டோபிதான், 1847 | |
வேறு பெயர்கள் | |
லிமிகோலா பால்சினெலசு |
அகன்ற அலகு உள்ளான் (Broad-billed sandpiper) என்பது ஒரு சிறிய கரைப்பறவையாகும்.
உடலமைப்பு
தொகுஆங்கிலப்பெயர் :Broad-billed Sandpiper அறிவியல் பெயர் :கேலிடிரிசு பால்சினெலசு
சிறிய பறவையான இது குளிர்காலத்தில் பெரும்பாலும் தோற்றத்தில் டன்லின் உள்ளானை ஒத்திருக்கும். இயற்கையில் ஒன்றுக்கொன்று வேறுபடுத்துவது அரிது. டன்லின் உள்ளானை விடச் சற்றுச் சிறியதாக் குறுகிய கால்களோடும் கன்னத்திலும் மார்பிலும் பழுப்புக் கறைகளுடன் காணப்படுவதைக் கொண்டும் கிட்ட நெருங்கிப் பார்க்க வாய்ப்பு ஏற்படும்போது இதனை வேறுபடுத்திக் காணலாம். இதன் உடல் நீளம் 17 செ. மீ. ஆகும். குளிர்காலத்தில் வலசை வரும் இதன் பழக்க வழக்கங்கள் வளைமூக்கு உள்ளானை ஒத்ததாக உள்ளது.
உணவு
தொகுஇது உள்ளானைப் போலப் புழுப்பூச்சிகளைத் தரையில் கொத்திப் பிடிப்பதெனவும் மற்ற உள்ளான்களைப்போல் அலகினைச் சேற்றிலோ மணலிலோ நுழைத்து இரை தேடுவதில்லை எனவும் கூறப்படுகின்ற ஒன்றே மற்றவற்றிற்கும் இதற்கும் இடையேயான வேறுபாடு என்று கூறப்படுவது உறுதி செய்யப்பட வேண்டிய ஒன்று. புழுப்பூச்சிகளோடு தாவரங்களின் விதைகளையும் உணவாகத் தேடித் தின்னும். பறக்க எழும்போது இச் இச் என வளைமூக்கு உள்ளான் போல கிறீச்சிட்டுக் கத்தக் கேட்கலாம்.
பரவலும் வாழிடமும்
தொகுஅகன்ற அலகு உள்ளான் நீண்ட தொலைவுக்கு வலசை போகின்றது. இனப்பெருக்கம் செய்யாத பருவத்தை கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து தெற்கு மற்றும் தென்கிழக்காசியா வழியாக ஆத்திரேலியாவரை செலவிடுகிறது.
இந்த பறவையின் இனப்பெருக்க வாழ்விடம் ஆர்க்டிக் வடக்கு ஐரோப்பா மற்றும் சைபீரியாவில் உள்ள ஈரமான தைகா சதுப்பு நிலமாகும். காதலின் போது ஆண் பறவை வானில் ஊடாட்ட காட்சியை நிகழ்த்துகிறது. இவை தரையில் உள்ள சிறிய பள்ளத்தில் கூடு கட்டி, 4 முட்டைகளை இடுகிறன.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2019). "Calidris falcinellus". IUCN Red List of Threatened Species. 2019: e.T22693464A155481741. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22693464A155481741.en. Retrieved 13 November 2021
உசாத்துணை
தொகு- தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:52
வெளி இணைப்புகள்
தொகு- Oiseaux Photos
- BirdLife species factsheet for Limicola falcinellus
- {{{2}}} on Avibase
- அகன்ற அலகு உள்ளான் videos, photos, and sounds at the Internet Bird Collection
- அகன்ற அலகு உள்ளான் photo gallery at VIREO (Drexel University)
- Interactive range map of Limicola falcinellus at IUCN Red List maps
- Audio recordings of Broad-billed sandpiper on Xeno-canto.
- Limicola falcinellus பிளிக்கரில்: Field Guide Birds of the World
- அகன்ற அலகு உள்ளான் media at ARKive