வளைமூக்கு உள்ளான்

பறவை இனம்
வளைமூக்கு உள்ளான்
இனப் பெருக்கம் செய்யாத காலத்தில் இறகு நிறம்
இனப் பெருக்க காலத்தில் இறகு நிறம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கேலிதிரிசு
இனம்:
கெ. பெருஜினியா
இருசொற் பெயரீடு
கேலிதிரிசு பெருஜினியா
(பொண்டோபிதான், 1763)
வேறு பெயர்கள்

எரோலியா பெருஜினியா

வளைமூக்கு உள்ளான் (Curlew sandpiper) என்பது ஆர்க்டிக் சைபீரியாவின் தூந்திரத்தில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு சிறிய உள்ளான் ஆகும். இது உலகில் பல பகுதிகளிலுக்கு வலசை போகிறது. இவை குளிர்காலத்தில் முக்கியமாக ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா, நியூசிலாந்து[2] போன்ற இடங்களுக்கு வலசை போகிறது. மேலும் வட அமெரிக்காவிலும் இப்பறவைக் காணமுடிகிறது.

விளக்கம்

தொகு
 
முட்டை
ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், சிவப்பு கழுத்து உள்ளானுடன் வளைமூக்கு உள்ளான்

சிறிய பறவையான இது குளிர்காலத்தில் பெரும்பாலும் தோற்றத்தில் டன்லின் உள்ளானை ஒத்திருக்கும்.[3] ஆனால் அதைவிட சற்று பெரியதான தோன்ற்றம, நீண்ட கீழ்-வளைந்த அலகு, நீண்ட கழுத்து, கால்கள் மற்றும் வெள்ளை பிட்டம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதில் வேறுபடுகின்றன. கோடைக் காலத்தில் இதன் தோற்றம் டன்லின் உள்ளானில் இருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும். இப்பறவை 18–23 செமீ (7.1–9.1 அங்குலம்) நீளமும், 44-117 கிராம் எடையும்,[4] 38–41 செமீ (15–16 அங்குலம்) இறக்கை அகலமும் கொண்டிருக்கும். இனப்பெருக்க காலத்தில் முதிர்ந்த பறவைகளின் மேல் பகுதி அடர் சாம்பல் நிறத்திலும், அடிப்பகுதி செங்கல்-சிவப்பு நிறத்திலும் காணப்படும். குளிர்காலத்தில், இந்த பறவையின் மேல் பகுதி வெளிர் சாம்பல் நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளையாகவும், கண்களின் மேற்பகுதியில் வெள்ளை புருவமும் காணப்படும்.

பரவலும் வாழ்விடமும்

தொகு

வளைமூக்கு உள்ளான் சைபீரியன் ஆர்க்டிக்கில் யமல் தீபகற்பத்திலிருந்து கொலியுச்சின் விரிகுடா வரை இனப்பெருக்கம் செய்கிறது.[5]

இனப்பெருக்கம்

தொகு

இவை சூன் முதல் ஆகத்து இறுதி வரை இனப்பெருக்கம் செய்கின்றன.[6] இனப்பெருக்க காலங்களில் ஆண் பறவை பெண் பறவையைக் கவர வானில் வட்டமிட்டு பல வித்தைகள் காட்டுகிறது.[7] இவை சதுப்பு நிலம் அல்லது குளத்தின் விளிம்பில் அல்லது தூந்திரத்தின் உலர்ந்த திட்டுகளி கூடு அமைக்கிறது. சராசரியாக 3.8 முட்டைகளை இடும். முட்டைகள் பெண் பறவையால் அடைகாக்கப்பட்டு 19-20 நாட்களில் குஞ்சு பொரிக்கின்றது. குஞ்சுகளை பெண் பறவை 14-16 நாட்கள் பராமரிக்கிறது.[5]

உணவு

தொகு

இது சதுப்பு நிலத்திலும், கடற்கரையிலும் உள்ள சேற்றில் உணவு தேடுகிறது. முக்கியமாக பார்வை வழியாக உணவை தேடி எடுக்கிறது. இது பெரும்பாலும் பூச்சிகள் மற்றும் பிற சிறிய முதுகெலும்பிலி உயிரினங்களை உண்கிறது.[8]

நிலை

தொகு

தென்னாப்பிரிக்காவில், குறிப்பாக லாங்கேபான் லகூனில் வளைமூக்கு உள்ளான்களின் எண்ணிக்கை, 1975 மற்றும் 2009 க்கு இடையில் 40% சரிவடைந்துள்ளது தெரியவருகிறது. இதேபோன்ற போக்கு ஆத்திரேலியாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் புவி வெப்பமடைதலினால் ஏற்படும் விளைவுகள் காரணமாக இருக்கக்கூடும்.[9] இது மிகப் பெரிய வாழிட எல்லையைக் கொண்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் அதைக் கண்டறிவது மிகவும் கடினம். மேலும் இவற்றின் எண்ணிக்கைக் குறைந்து வருவதாகத் தோன்றுகிறது.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2017). "Calidris ferruginea". IUCN Red List of Threatened Species 2017: e.T22693431A110631069. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22693431A110631069.en. https://www.iucnredlist.org/species/22693431/110631069. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Thomas Alerstam (1993). Bird Migration. Cambridge University Press. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521448222.
  3. "Curlew sandpiper". RSPB.
  4. Oiseaux.net. "Bécasseau cocorli - Calidris ferruginea - Curlew Sandpiper". www.oiseaux.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-30.
  5. 5.0 5.1 Piersma, T.; van Gils, J.; Wiersma, P. (1996). "Curlew sandpiper". In del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J. (eds.). Handbook of the Birds of the World. Vol. 3: Hoatzin to Auks. Barcelona, Spain: Lynx Edicions. pp. 524–525. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-87334-20-7.
  6. Cramp 1983, ப. 341.
  7. Holmes, Richard T.; Pitelka, Frank A. (1964). "Breeding behavior and taxonomic relationships of the Curlew Sandpiper". The Auk 81 (3): 362–379. doi:10.2307/4082691. https://sora.unm.edu/node/21327. 
  8. Cramp 1983, ப. 341–342.
  9. de Villiers, M.S., ed. (2009). Birds and Environmental Change: building an early warning system in South Africa. Pretoria: SANBI. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-620-45305-9.
  10. "Species". Agreement on the Conservation of African-Eurasian Migratory Waterbirds (AEWA). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Calidris ferruginea
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைமூக்கு_உள்ளான்&oldid=3768461" இலிருந்து மீள்விக்கப்பட்டது