அகரம், திருப்புவனம்

அகரம் (Agaram) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கழுகேர்கடை ஊராட்சியில் அமைந்த கிராமம் மற்றும் தொல்லியல் களம் ஆகும்.[1][2] கீழடி அகழாய்வு மையம், அகரம் கிராமத்திற்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அகரத்தில் நடைபெற்ற அகழாய்வில் தங்க நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3]

அமைவிடம்

தொகு

மதுரை-இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் திருப்புவனம் அருகே அமைந்த அகரம் கிராமம், திருப்புவனத்திற்கு 6 கிமீ தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 29 கிமீ தொலைவிலும், மதுரையிலிருந்து 20 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 630611 ஆகும். தொலைபேசி குறியீடு எண் 04574 ஆகும். இதனருகே அமைந்த பெரிய நகரம் மதுரை ஆகும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. அகரம் தொல்லியல் களத்தில் தங்க நாணயம் கண்டுபிடிப்பு
  2. சிவகங்கை அகரம் அகழ்வாராய்ச்சியில் தங்க நாணயம் கண்டுபிடிப்பு
  3. சிவகங்கை அகரம் அகழ்வாராய்ச்சியில் தங்க நாணயம் கண்டுபிடிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரம்,_திருப்புவனம்&oldid=3295150" இலிருந்து மீள்விக்கப்பட்டது