கொந்தகை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

கொந்தகை, தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள கொந்தகை ஊராட்சியில் அமைந்த தொல்லியல் கிராமம் ஆகும்.[1] கொந்தகை கிராமம், மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

கொந்தகை
சிற்றூர்
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை மாவட்டம்
வருவாய் வட்டம்திருப்புவனம் வட்டம்
ஊராட்சிகொந்தகை ஊராட்சி
அரசு
 • வகைகிராமம்
 • நிர்வாகம்கொந்தகை
ஏற்றம்108 m (354 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5 500
மொழிகள்
 • அலுவல் மொழிகள்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்630 611
தொலைபேசி குறியிடு எண்04574
கொந்தகையில் அமைந்துள்ள கீழடி அருங்காட்சியகம்

மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான சிவகங்கையிலிருந்து 32 கிமீ தொலைவிலும் கொந்தகை கிராமம் உள்ளது. கொந்தகை கிராமத்திற்கு அருகில் உள்ள கீழடியில், தொல்லியல் அகழ்வாய்வு மையம் உள்ளது. மேலும் கொந்தகையில் கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

கொந்தகை கிராமத்தின் அருகில் உள்ள பெரிய நகரம் மதுரை ஆகும். அருகில் உள்ள தொடருந்து நிலையம் சிலைமான் தொடருந்து நிலையம் ஆகும். கொந்தகை கிராமத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் துணைக்கோயிலான கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. [2][3]

மக்கள் தொகை தொகு

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொந்தகை கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 5,500 ஆகும். இதில் ஆண்கள் 2,736; பெண்கள் 2,764 ஆகவுள்ளனர். தலித் சமூகத்தினர் 2,003 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 67.65% ஆகவுள்ளது. இக்கிராமத்தில் 1,420 வீடுகள் உள்ளது.[4]

அருகில் உள்ள கிராமங்கள் தொகு

தொல்லியல் களம் தொகு

கீழடி அகழாய்வுத் திட்டத்தின் ஆறாம் கட்டமாக கொந்தகை, மணலூர், அகரம், திருப்புவனம், கீழடி ஆகிய நான்கு இடங்களில் 15 பிப்ரவரி 2020 முதல் அகழ்வாய்வு நடந்து வருகிறது. கொந்தகையில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பட்டுள்ளன. 19 சூன் 2020 அன்று நடைபெற்ற அகழாய்வில குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று முழு அளவில் கிடைத்துள்ளது. [5]கொந்தகை ஈமக்காடாக இருந்த இடம் என்பதால் முதுமக்கள் தாழிகள் கொந்தகையில் அதிகளவில் கிடைத்து வருகின்றன.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொந்தகை&oldid=3776706" இலிருந்து மீள்விக்கப்பட்டது