அகரம் வெள்ளாஞ்செட்டியார் மகாசன நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, இராசிபுரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அகரம் வெள்ளாஞ்செட்டியார் மகாசன நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியாகும்.
அகரம் வெள்ளாஞ்செட்டியார் மகாசன நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி | |
---|---|
முகவரி | |
இராசிபுரம் நாமக்கல், தமிழ் நாடு இந்தியா | |
தகவல் | |
வகை | அரசு உதவி பெறும் பள்ளி |
நிறுவல் | 1956 |
பள்ளி அவை | நடுநிலை |
வகுப்புகள் | 8 |
கற்பித்தல் மொழி | தமிழ்,ஆங்கிலம் |
வரலாறு
தொகுஇப்பள்ளியானது 1956 சனவரி 14 அன்று சேலம் டி. ஜி. தங்கவேல் செட்டியாரின் தலைமையில், அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சரான காமராசரால் திறந்து வைக்கப்பட்டது. முதலில் துவக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியானது பின்னர், 1988 செப்டம்பர் 8 அன்று நடுநிலைப்பள்ளியாக உயா்த்தப்பட்டது.
செயல்பாடுகள்
தொகு7310 ச.மீ பரப்பளவு கொண்ட இப்பள்ளியில் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும் சுகாதாரத்தை பேணவும் பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- கிராமக் கல்விக் குழு
- பள்ளி மேலாண்மைக் குழு
- பெற்றோர் ஆசிரியர் கழகம்
- அன்னையர் குழு
- பள்ளி சுகாதார குழு
- சாரண சாரணிய இயக்கம்
- இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்
- தேசியப் பசுமைப் படை
மன்ற செயல்பாடுகள்
தொகுபள்ளியில் பல்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவையாவன
- சுற்றுச்சூழல் மன்றம்
- அறிவியல் மன்றம்
- சமூக அறிவியல் மன்றம்
- கணிதம் மன்றம்
- தமிழ் இலக்கியம் மன்றம்
- ஆங்கில இலக்கியம் மன்றம்
- சதுரங்க மன்றம்