அகளி, பாலக்காடு
அகளி (Agali, Palakkad) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும் இது அகளி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சிற்றூர்.[2]
அகளி Agali | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 11°06′04″N 76°38′51″E / 11.1012°N 76.6474°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 76 km2 (29 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 22,327 |
• அடர்த்தி | 290/km2 (760/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
• பிற | மலையாளம்,இருளா,தமிழ்[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | KL-50 |
அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
தொகுஅகளி ஊருக்கு அருகில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா உள்ளதால் இங்கிருந்து பூங்காவுக்கு விரைவில் செல்லமுடியும். அதற்கு வசதியாக அகளி ஊரில் மூன்று தங்கும் விடுதிகளும், பல குடில்களும் உள்ளன. ஏனெனில் இந்த ஊர் பூங்காவிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால், அமைதிப் பள்ளத்தாக்குக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக உள்ளது.
மக்கள்வகைப்பாடு
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அகளி கிராமத்தின் மக்கள் தொகை 22,327 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 11,239 என்றும், பெண்களின் எண்ணிக்கை 11,088 என்றும் உள்ளது. இப்பகுதி 76 கி. மீ.2 பரப்பளவில் பரவியுள்ளது. ஈரில் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,346 ஆகும், அதில் 1,195 பேர் ஆண் பிள்ளைகளாகவும், 1,151 பேர் பெண் பிள்ளைகளாகவும் உள்ளனர். அகளி கிராமத்தின் எழுத்தறிவு 79.9% ஆகும். இது கேரளத்தின் சராசரி எழுத்தறிவான 94% ஐ விட குறைவாகும். ஊரில் எழுத்தறிவு பெற்றவர்களில் ஆண் 84.2% என்றும், பெண்கள் 75.5% என்றும் உள்ளனர்.
அகளி கிராம ஊராட்சியின் மொத்த மக்கள் தொகை 34,941 ஆகும். ஊராட்சியின் பரப்பளவு 153 கி. மீ.2 உள்ளது. ஊராட்சியின் மக்கள் தொகையில் ஆண்கள் 17,393 பேரும், பெண்கள் 17,548 பேரும் உள்ளனர். ஊராட்சி எல்லையில் 8,695 குடும்பங்கள் வாழ்கின்றன. அகளி ஊராட்சியில் அகளி, கல்லாமலை என இரண்டு வருவாய் கிராமங்களுக்கு மேல் உள்ளன. ஊராட்சியில் 0-6 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 3,786 ஆகும். அகளி கிராம ஊராட்சியின் மொத்த கல்வியறிவு 82.7% ஆகும்.
போக்குவரத்து
தொகுகேரளத்தின் மண்ணார்க்காட்டில் இருந்து அகளி 38 கி. மீ. தொலைவில் உள்ளது. தமிழக எல்லையில் உள்ள ஆனக்கட்டி என்ற சிறிய நகரம் அகளியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனைக்கட்டியிலிருந்து பேருந்துகள் ஆனைக்கட்டி-மன்னார்காடு சாலை வழியாக அகலிக்கு வரும் தொலைவு 18 கி.மீ ஆகும்.
அட்டப்பாடியில் அனைத்து நிறுத்தங்களிலும் போக்குவரத்துக்கான QR குறியீடுகள் உள்ளன. இந்த திட்டத்தை மக்கள் ராஜா புரொடக்சன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது..
மேற்கோள்கள்
தொகு- ↑ "Table C-16 Population by Mother Tongue: Kerala". www.censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்.
- ↑ "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 30 December 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.