மண்ணார்க்காடு

மண்ணார்க்காடு என்னும் ஊர், கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. அமைதிப் பள்ளத்தாக்கு இங்கிருந்து 66 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாவட்டத்தின் தலை நகரான பாலக்காடு 40 கி.மீ. வடகிழக்கு உள்ளது.

மண்ணார்க்காடு
நேர வலயம் IST

மக்கள்தொகு

இங்கு ஏறத்தாழ 150,000 மக்கள் வாழ்கின்றனர். இங்கு ரப்பர், தென்னை, பாக்கு, நேந்திர வாழை, ஜாதிக்காய், நெல் ஆகியவற்றை பயிரிடுகின்றனர். மலையாளத்தைத் தவிர தெலுங்கு, கன்னடம், துளு, தமிழ் உள்ளிட்ட மொழிகளைப் பேசுவோரும் வாழ்கின்றனர்.

குந்திப்புழை, நெல்லிப்புழை ஆகிய ஆறுகள் பாய்கின்றன.

அண்மைய இடங்கள்தொகு

  • காஞ்ஞிரப்புழை அணை - 15 கி.மீ.
  • சைலன்ட் வேலி தேசியப் பூங்கா - 43 கி.மீ.
  • மலம்புழை அணை - 40 கி.மீ.
  • திப்பு சுல்தான் கோட்டை, பாலக்காடு - 43 கி.மீ.
  • மீன் வல்லம் அருவி - 15 கி.மீ.
  • பாத்ரக்கடவு - 10 கி.மீ.
  • சிறுவாணி டாம் - 25 கி.மீ.
  • அட்டப்பாடி - 20 கி.மீ.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணார்க்காடு&oldid=3110515" இருந்து மீள்விக்கப்பட்டது