அகிலாண்டேஸ்வரி

அகிலாண்டேஸ்வரி என்பவர் இந்து தெய்வமான பார்வதி தேவியின் முக்கிய வடிவங்களில் ஒன்றாவார். அகிலாண்டேஸ்வரிக்கு திருவானைக்காவலில் புகழ்பெற்ற கோயில் உள்ளது. பார்வதிவின் மற்ற முக்கியமான வடிவங்கள் மதுரை மீனாட்சி, காஞ்சிபுரம் காமட்சி. வாரணாசியில் விஷாலட்சி ஆகும். அகிலாண்டேஸ்வரி என்பதற்கு அகிலம் என்றால் உலகம். உலகத்தை ஆள்பவள் என்று பொருள். இந்த தேவி பற்றிய மேலும் தகவல்கள் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் கிடைக்கின்றன. இவரின் வாகனம் முதலை. 2012 இல் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், ஹரிணி ஆகியோர் இந்த அம்மனின் சிறப்புகளை பாடி வெளியிட்டுள்ள பாடல்கள் "நவசக்தி ஜெய ஜெய சக்தி " என்ற ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளன இந்த பாடலில் கோயில் மற்றும் அதன் முழு வரலாற்றும் பெரிய முறையில் இடம்பெற்றுள்ளது. [1]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிலாண்டேஸ்வரி&oldid=2371598" இருந்து மீள்விக்கப்பட்டது