அகுஸ்டின்-லூயி கோசி

பிரெஞ்சு கணிதவியலாளர் (1789-1857)

அகுஸ்டின்-லூயி கோசி (Augustin-Louis Cauchy[1] பிரெஞ்சு மொழி: [oɡystɛ̃ lwi koʃi]; 21 ஆகத்து 1789 – 23 மே 1857) என்பவர் பிரான்சியக் கணிதவியலாளர், பொறியியலாLaர், இயற்பியலறிஞர் ஆவார். இவர் பகுவியல் (கணிதம்), தொடர்ம விசையியல் உட்படப் பல கணிதத் துறைகளில் முக்கிய பங்களிப்பை வழனிகினார். நுண்கணிதத் தேற்றங்களை முதன் முதலில் நிறுவியவர்களில் இவர் முக்கியமானவராகப் போற்றப்படுகிறார். இயற்கணித்தின் பொதுமையின் பட்டறிவுவழி முறைமைகளை நிராகரித்தார். இவர் மெய்ப்புனை பகுப்பியல், நுண் இயற்கணிதத்தில் வரிசைமாற்றுக் குல முறைமை ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்.[2]

அகுஸ்டின்-லூயி கோசி
Augustin-Louis Cauchy
1840 இல் கோசி
பிறப்பு(1789-08-21)21 ஆகத்து 1789
பாரிஸ், பிரான்சு
இறப்பு23 மே 1857(1857-05-23) (அகவை 67)
பிரான்சு
தேசியம்பிரான்சியர்
துறைகணிதம், இயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்எக்கோல் பல்தொழில்நுட்பக் கல்லூரி
அறியப்படுவதுகணிதவியலாளர்

கண்டுபிடிப்புகள்  : தொகு

  • "குவிவு பலகோண பட்டகம் கட்டிருக்கப்பட்டிருக்கும்" என்பதற்கு தீர்வு கண்டார். இந்நிகழ்வு இவருக்கு பெருமையைத் தேடித் தந்தது. இந்த தீர்வாய்வு கணிதமேதை லக்ராஞ்சால் இவருக்குக் கொடுக்கப்பட்டது.
  • "ஒரு மூடிய புறப்பரப்பானது கட்டிருக்கப்பட்டிருக்கும்" என்ற இயூலாின் உரைகோளினை நிறைவு செய்தார்.
  • "ஒவ்வொரு முழு எண்ணும் அதிகபட்சமாக n, n - கோண எண்களின் கூடுதலாக எழுத முடியும்" என்ற பெர்மாட்டின் உரைகோளுக்கு தீர்வு கண்டார்.
  • 1814-ல் தொகையீட்டுத் தேற்றத்தினை பிரெஞ்ச் கல்விக்குழுவில் சமர்ப்பித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Cauchy". Random House Webster's Unabridged Dictionary.
  2.   ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Cauchy, Augustin Louis". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 5. (1911). Cambridge University Press. 555–556. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோசி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • O'Connor, John J.; Robertson, Edmund F., "அகுஸ்டின்-லூயி கோசி", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  • Cauchy criterion for convergence
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகுஸ்டின்-லூயி_கோசி&oldid=2736498" இலிருந்து மீள்விக்கப்பட்டது