அக்சிவ்லாந்து

அக்சிவ்லாந்து அல்லது அஷ்ஷிவ் (Akhzivland) என்ற மிகச்சிறிய நாடு, இஸ்ரேல் நாட்டின் மேற்கு எல்லையை ஒட்டிய மத்திய தரைக் கடற்கரையில், லெபனான் நாட்டின் எல்லைக்கும், இஸ்ரேல் நாட்டின் எல்லைக்கும் இடையே அமைந்துள்ளது. இந்நாடு 1971ஆம் ஆண்டில் எலி அவிவி என்பரால் நிறுவப்பட்டது. இந்நாட்டின் சட்டபூர்வமான இறையாண்மை தொடர்பான கருத்துகள் ஐயப்பாடாக இருந்த போதும், இஸ்ரேல் நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், அக்சிவ்லாந்து நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.[2][3]

அக்சிவ்லாந்து
מדינת אכזיב
கொடி of அக்சிவ்லாந்து
கொடி
நிலைCurrent
அரசாங்கம்
• அதிபர்
இலி அவிவி (Eli Avivi)
நிறுவுதல்
• நிறுவப்பட்ட ஆண்டு
1971[1]
மக்கள் தொகை
• மதிப்பிடு
2 (2013)
நேர வலயம்ஒ.அ.நே+2 (இஸ்ரேல் சீர் நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (இஸ்ரேல் கோடை காலம்)


அக்சிவ்லாந்து அருங்காட்சியகம் 2015

அமைவிடம் தொகு

மத்தியதரைக் கடற்கரை ஒட்டியுள்ள கலிலீ பகுதியிலிருந்து, ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், அக்சிவ் என்ற சிதிலமடைந்த பகுதியில், இம்மிகசிறிய நாடு அமைந்துள்ளது.

வரலாறு தொகு

யுதேய நாட்டின் ஒன்பது நகரங்களில் ஒன்றாக அக்சிவ் நகரம் இருந்ததாக ஜோசுவாவின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலுவைப் போரின் போது இந்நகரம் ஒரு கிறித்தவா மாவீரனுக்கு பரிசாக அளிக்கப்பட்டது. மம்லுக் (Mamluk) காலத்தில், அவரது படைத் தலைவர், இந்நகரைக் கைப்பற்றி, அல்-ஜிப் எனும் மீன் பிடிக்கும் நகராக மாற்றி அமைத்தார். 1948ஆம் ஆண்டில் நடந்த இஸ்ரேல்-அரபுப் போரின் போது, இந்நகர மக்கள் அக்சிவ் நகரை விட்டு வெளியேறினர்.[1]

1952ஆம் ஆண்டில் இரான் நாட்டின் புகழ்பெற்ற மாலுமி இலி அவிவி என்பவர், அக்சிவ் பகுதியில் ஒரு கட்டிடத்தில் குடியேறினார்.[4] 1961ஆம் ஆண்டில் இஸ்ரேல் அரசால், அக்சிவ் பகுதியின், ஒரு பகுதியை பிரான்சு நாட்டின் நிறுவனத்திற்கு ஐம்பது ஆண்டு கால குத்கைக்கு விடப்பட்டது.[1]

1970ஆம் ஆண்டில் இஸ்ரேல் படையினர், இலி அவிவி தங்கியிருந்த அக்சிவ் பகுதியில் இருந்த கட்டிடங்களை தகர்த்தெறிந்தனர். இதனை கண்டித்து, எலி அவிவி, அக்சிவ்லாந்து என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கினார். புதிய நாட்டில் கடற்கரை உணவு விடுதிகள், அருங்காட்சியகங்கள் அமைத்தார். பின்னர் இம்மிகச் சிறிய நாடு, உலகின் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு கலாச்சார சுற்றுலா மையமாக மாறியது.[5][6]

அக்சிவ்லாந்து நிறுவப்பட்டதைத் தொடர்ந்து எலி அவிவி இஸ்ரேல் படையினரால் கைது செய்யப்பட்டார். பின் நீதிமன்றத்தால் பத்து நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டார்.[4] பின்னர் எலி அவிவி, இஸ்ரேல் நீதிமன்றத்தில், இஸ்ரேல் அரசிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற தீர்ப்பின்படி, இலி அவிவிக்கு அக்சிவ்லாந்து பகுதி 99 ஆண்டு கால குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் அக்சிவ்லாந்து நாட்டின் சட்டபூர்மான இருப்புத் தன்மையை (இறையாண்மையை) இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை.[7]

1971இல் தனக்குத் தானே விடுதலையை அறிவித்துக் கொண்ட அக்சிவ்லாந்து நாடு தனக்கென அரசியலமைப்புச் சட்டம், நாட்டுப்பண், மற்றும் தேசியக் கொடி கொண்டுள்ளது. மேலும் கடவுச் சீட்டுகளும் வழங்குகிறது. சென்ற 40 வருடமாக காலமாக இலி அவிவி நாட்டின் அதிபராக உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Lagerquist, Peter (Autumn 2006). "Vacation from History: Ethnic Cleansing as the Club Med Experience". Journal of Palestine Studies (University of California Press on behalf of the Institute for Palestine Studies) 36 (1): 43-53. http://www.jstor.org/stable/pdfplus/10.1525/jps.2006.36.1.43.pdf. பார்த்த நாள்: 18 December 2014. 
  2. Miller, Colin. "A World of His Own: Eli Avivi". Go World Travel. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
  3. Ryan, John (2006). Micronations: The Lonely Planet Guide to Home-Made Nations. Lonely Planet. பக். 48-50. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-74104-730-7. https://archive.org/details/micronationsthel0000ryan. 
  4. 4.0 4.1 Amelia Thomas (5 November 2009). "Finding Akhzivland". Lonely Planet. Archived from the original on 8 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 December 2014.
  5. Berg, Raffi (10 March 2015). "One-man rule in Israel's hippy micro-state". BBC News. http://www.bbc.co.uk/news/entertainment-arts-31802078. பார்த்த நாள்: 10 March 2015. 
  6. McKenny, Leesha (13 September 2009). "The despot concierge". Traveller. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
  7. "Akhzivland: the most peaceful "country" in the Middle East". Atlas Obscura. பார்க்கப்பட்ட நாள் 19 December 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்சிவ்லாந்து&oldid=3848890" இலிருந்து மீள்விக்கப்பட்டது