அக்னிமித்ரா பால்

அக்னிமித்ரா பால் (Agnimitra Paul) என்பவர் இந்திய ஆடை வடிவமைப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் மேற்கு வங்காள சட்டமன்றத்திற்கு அசன்சோல் தெற்கு தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தலைவியாவார்.[4] இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கொல்கத்தாவில் ஆடை அலங்கார வடிவமைப்பாளராக இருந்தார்.

அக்னிமித்ரா பால்
சட்டமன்ற உறுப்பினர் மேற்கு வங்காள சட்டமன்றம்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்தபாசு பானர்ஜி
தொகுதிஅசன்சோல் தெற்கு
தலைவர், மேற்கு வங்காள பாரதிய ஜனதா கட்சி, மகளிர் அணி
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்லேக்க்டெ சட்டர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அக்னிமித்ரா ராய்[2]

1973 (அகவை 50–51)[3]
ஆசான்சோல், மேற்கு வர்த்தமான் மாவட்டம் மேற்கு வங்காளம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பார்த்தா பால்
பிள்ளைகள்2 மகன்கள்
முன்னாள் கல்லூரி
  • ஜதாப்பூர் பல்கலைக்கழகம் (எம். பி. ஏ.) * பிர்லா கலை மற்றும் மேலாண்மை நிறுவனம், (ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம்), * பன்வாரிலால் பலோடியா கல்லூரி (இளம் அறிவியல்)
தொழில்அரசியல்வாதி, ஆடை வடிவமைப்பாளர்

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அக்னிமித்ரா பால் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மருத்துவர், அசோக் ராய் ஆவார். இவர் அசன்சோலில் குழந்தை மருத்துவர் பணியாற்றினார். லோரெட்டோ பெண்கள் துறவி மடப் பள்ளியிலும் அசன்சோல் பெண்கள் கல்லூரியிலும் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பினை முடித்தார்.[5] பன்வாரிலால் பலோடியா கல்லூரியில் தாவரவியலில் பட்டப்படிப்பை முடித்தார். ஆரம்பத்தில் மருத்துவம் படிக்க விரும்பிய பால், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையில் முதுகலைப் படிப்பை முடித்தார். பின்னர் பிர்லா கலை மற்றும் மேலாண்மை அறிவியல் நிறுவனத்தில் ஆடை அலங்கார வடிவமைப்பு தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பினை முடித்தார்.

இவர் பார்தோ பால் என்ற தொழில்முனைவோரை மணந்தார்.[6] இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

ஆடை அலங்கார தொழில் தொகு

பால், ஓர் ஆடை வடிவமைப்பாளராக, கோய் மேரே தில் சே பூச்சே மற்றும் வயா டார்ஜிலிங் போன்ற பல பாலிவுட் படங்களுக்கான ஆடைகளை வடிவமைத்துள்ளார்.[7]

இவர் ஸ்ரீதேவி, ஈஷா தியோல், மிதுன் சக்கரவர்த்தி, ஷோனல் ராவத், கே. கே. மேனன், சோனாலி குல்கர்னி, வினய் பாடக் மற்றும் பர்வின் டபாஸ் ஆகியோருக்கான ஆடைகள் மற்றும் தனிப்பட்ட ஆடை மாடங்களை வடிவமைத்துள்ளார்.[8][9]

இவர் இந்தியாவின் பல நகரங்களில் "இங்கா" என்ற தனது சொந்த நிலையத்தினை தொடங்கினார். பால் லக்மே அலங்கார வாரம் கோடை/உல்லாசம் 2013 நிகழ்ச்சியினை வடிவமைத்தார்.

முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இலரி கிளின்டனுக்கு பால் வடிவமைத்த சால்வை மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன.[9]

அரசியல் வாழ்க்கை தொகு

மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான பால், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர் 2020ஆம் ஆண்டில், லாக்கெட் சாட்டர்ஜியைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் மாநிலத் தலைவராகப் பால் பொறுப்பேற்றார்.[10] இதன் பின்னார், பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தலைவராக, மாநிலம் முழுவதும் சுற்றுபயணம் செய்து, 23 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு "உமா" என்ற சுய பாதுகாப்பு பயிற்சிப் பட்டறையினை ஏற்பாடு செய்தார்.[11]

பால், 2021ஆம் ஆண்டு மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் அசோன்சோல் தெற்கில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர், அகில இந்திய திரிணாமல் காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சயோனி கோசை 4487 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[12]

தேர்தல் பிரச்சாரத்தின் போது, அக்னிமித்ரா பால் கிழக்கு மிதனாப்பூரில் திரிணாமல் காங்கிரசு தலைவர் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாகப் பேசியதற்காக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தனது ஆதரவாளர்களை "பொழுதுபோக்கிற்காகப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு" கேட்டுள்ளார் எனக் கூறியதாக அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.[13]

மேற்கோள்கள் தொகு

  1. "Asansol Dakshin Election Result 2021 Live Updates: Agnimitra Paul Of BJP Wins". https://www.news18.com/news/politics/asansol-dakshin-election-result-2021-live-updates-asansol-dakshin-winner-loser-leading-trailing-mla-margin-3696311.html. 
  2. "I admire Modi ji a lot and that's the sole reason I joined the BJP: Agnimitra Paul". https://theoptimist.news/i-admire-modi-ji-a-lot-and-thats-the-sole-reason-i-joined-the-bjp-agnimitra-paul/. 
  3. "Bio". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-03.
  4. "Asansol Dakshin Election Result 2021 LIVE: BJP's Agnimitra Paul wins by 1,800 votes". https://www.cnbctv18.com/politics/asansol-dakshin-election-result-2021-live-how-to-check-asansol-dakshin-assembly-vidhan-sabha-election-winners-losers-vote-margin-news-updates-9131131.htm. 
  5. "I admire Modi ji a lot and that's the sole reason I joined the BJP: Agnimitra Paul". 17 September 2019.
  6. "Following her heart". www.telegraphindia.com.
  7. "Fashion designer Agnimitra Paul joins BJP in Bengal". 23 March 2019. https://www.business-standard.com/article/news-ians/fashion-designer-agnimitra-paul-joins-bjp-in-bengal-119032300552_1.html. 
  8. "Sridevi gave me my Bollywood break in 2000: Agnimitra Paul". https://www.business-standard.com/article/pti-stories/sridevi-gave-me-my-bollywood-break-in-2000-agnimitra-paul-118022601092_1.html. 
  9. 9.0 9.1 "About Indian Designer Agnimitra Paul | Search Indian and Asian Fashion Designer Online". strandofsilk.com. Archived from the original on 2021-06-25. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  10. Das, Madhuparna (24 June 2020). "Roopa, Locket, Agnimitra — how BJP mahila morcha got a 'glamorous turn' in Bengal".
  11. "BJP Mohila Morcha to give self-defence training to Bengal women". https://www.thehindu.com/news/national/other-states/bjp-mohila-morcha-to-give-self-defence-training-to-bengal-women/article32615856.ece. 
  12. "TMC's Saayoni, BJP's Agnimitra battle it out in Asansol South | Kolkata News - Times of India". The Times of India.
  13. "West Bengal: Complaint against BJP's Agnimitra Paul for rape remarks". The Indian Express (in ஆங்கிலம்). 2020-11-28. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னிமித்ரா_பால்&oldid=3592341" இலிருந்து மீள்விக்கப்பட்டது