அக்ரைலோபீனோன்
அக்ரைலோபீனோன் (Acrylophenone) என்பது C9H8O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டோபீனோன், பார்மால்டிகைடு மற்றும் ஓர் [அமீன் ஐதரோகுளோரைடு ஆகியனவற்றைப் பயன்படுத்தி மன்னிச் வினையின்[1] மூலம் அக்ரைலோபீனோன் தயாரிக்கலாம். தனியுறுப்பு அல்லது எதிர்மின்னயனி வழிமுறை [1]வழியாக இச்சேர்மத்தை பாலி(பீனைல்வினைல் கீட்டோன்) என்ற பலபடியாக மாற்றவியலும். சிலவகை பிசின்கள் தயாரிப்பில் இச்சேர்மத்தை சக ஒற்றைப்படியாக சில சமயங்களில் பயன்படுத்துகிறார்கள்.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-பீனைல்புரொப்-2-யீன்-1-ஒன்
| |
வேறு பெயர்கள்
அக்ரைலோபீனோன்; பீனைல்வினைல் கீட்டோன்
| |
இனங்காட்டிகள் | |
768-03-6 | |
ChemSpider | 12486 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13028 |
| |
பண்புகள் | |
C9H8O | |
வாய்ப்பாட்டு எடை | 132.16 g·mol−1 |
அடர்த்தி | 0.996 கி/செ.மீ3 |
கொதிநிலை | 115 °C at 18 Torr |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Alger, Mark (1996). Polymer science dictionary (2nd ed.). London: Chapman & Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0412608704.