முதன்மை பட்டியைத் திறக்கவும்

அக்லிலு லெம்மா

அக்லிலு லெம்மா (Aklilu Lemma, இறப்பு: ஏப்ரல் 5, 1997) ஒரு எத்தியோப்பிய உயிரியல் அறிஞர். இவர் பில்கார்சியா என்னும் நோய் பரவக் காரணமாக விளங்கும் நத்தைகளைக் கொல்லும் ஒரு தாவர இயற்கைக் கொல்லியைக் (Phytolacca dodecandra) கண்டறிந்தார்.[1][2][3] இம்மருந்து கண்டுபிடிக்கும் முன்னர் வரை இந் நத்தைகளைக் கொல்ல மேற்கத்திய வேதி மருந்துகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. இவை நீரில் கலக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் அந் நீரைப் பயன்படுத்திய மக்களுக்கு பல பக்கவிளைவுகள் ஏற்பட்டது. அக்லிலு லெம்மா கண்டுபிடித்த மருந்து ஒரு இயற்கைக் கொல்லியும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாததும் ஆகும்.

அக்லிலு லெம்மா
இயற்பெயர்አክሊሉ ለማ
பிறப்பு18 September 1935
Jijiga, Ethiopia
இறப்பு5 April 1997
தேசியம்Ethiopian
துறைPathobiology
பணியிடங்கள்Haile Selassie I University
Institute of Pathobiology
United Nations
Johns Hopkins University
கல்வி கற்ற இடங்கள்Addis Ababa University College
Johns Hopkins University
விருதுகள்Right Livelihood Award of Sweden (1989)

பில்கார்சியா என்னும் நோய் ஆப்பிரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு நோய். லெம்மா அவர்கள் என்டோடு எனப்படும் ஆப்பிரிக்க மக்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வரும் தாவரத்தின் விதைகள் அந் நத்தைகளைக் கொல்லும் ஆற்றல் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார்.

இது தொடர்பான இவரது பணியைப் பாராட்டி இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது 1989-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவர் 1997-ஆம் ஆண்டு தனது 63-ஆம் அகவையில் இறந்தார்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்லிலு_லெம்மா&oldid=2693124" இருந்து மீள்விக்கப்பட்டது