அக்லூஜ் கோட்டை
அக்லூஜ் கோட்டை (Akluj Fort) என்பது மகாராட்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் சோலாப்பூரிலிருந்து 115 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். இந்தக் கோட்டை சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான கோட்டையாகும். உள்ளூர் மக்களின் உதவியுடன் சிறீ தின்கராவ் தோப்டே மற்றும் அவினாசு தோப்டே ஆகியோரால் இக்கோட்டை மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இந்தக் கோட்டை இப்போது சிவசிருஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.
அக்லூஜ் கோட்டை | |
---|---|
अकलूज किल्ला | |
சோலாப்பூர் மாவட்டம், மகாராட்டிரம் | |
ஆள்கூறுகள் | 17°53′39.1″N 75°01′21.7″E / 17.894194°N 75.022694°E |
வகை | மலைக் கோட்டை |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்திய அரசு |
கட்டுப்படுத்துவது | இந்தியா (1947-) |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | நல்ல நிலையில |
இட வரலாறு | |
கட்டிடப் பொருள் |
கல் |
உயரம் | 1598 அடி |
வரலாறு
தொகுஅக்லூஜ் நகரத்தில் இக்கோட்டையின் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பாஜி மகாராஜ் மற்றும் 26 பேர் முகர்ரப் கானால் சங்கமேசுவரிலிருந்து கைப்பற்றப்பட்டு, இந்தக் கோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர் [1]
அணுகல்
தொகுஅக்லுஜ் கோட்டையின் அருகிலுள்ள நகரம் சோலாப்பூர் ஆகும். இந்தக் கோட்டை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்காகத் திறக்கப்படுகிறது. இது நீரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம் புனே ஆகும். இது சுமார் 170 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பார்க்க வேண்டிய இடங்கள்
தொகுகோட்டைக்குள் சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இழைகளால் செய்யப்பட்ட பல்வேறு சிலைகள் உள்ளன.[2] கோட்டையில் உள்ள அனைத்து இடங்களையும் பார்வையிடச் சுமார் ஒரு மணி நேரம் ஆகும். இது மகாராட்டிராவில் நன்கு பராமரிக்கப்படும் கோட்டைகளில் ஒன்றாகும்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Gazetteers Department - SOLAPUR". solapur.gov.in. Archived from the original on 2009-11-20.
- ↑ "Akluj Fort, Sahyadri,Shivaji,Trekking,Marathi,Maharastra". trekshitiz.com. Archived from the original on 2012-08-28.