அங்குசகிரி கொத்தூர் திம்மராய சுவாமி கோயில்

திம்மராய சுவாமி கோயில் என்பது கிருட்டிணகிரி மாவட்டத்தின், சூளகிரி வட்டம், மேலுமலைப் பகுதியில் காளிங்கவாரம் ஆஞ்சல், அங்குசகொத்தூரில், அங்குசகிரி என்னும் மலையடிவாரத்தில் உள்ள ஒரு பெருமாள் கோயிலாகும்.

திம்மராய சுவாமி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:அங்குசகிரி கொத்தூர்
சட்டமன்றத் தொகுதி:வேப்பனபள்ளி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:திம்மராய சுவாமி
உற்சவர்:திம்மராய சுவாமி
உற்சவர் தாயார்:துளசி அம்மன், இலட்சுமி தேவி
வரலாறு
அமைத்தவர்:அப்புராவ்

தோட்டி மலை

தொகு

அங்குசகிரியின் பழைய பெயர் தோட்டிமலையாகும். இந்த மலை பார்ப்பதற்கு தோட்டியைப்போல (அங்குசம்) அமைந்த காரணத்தால் இந்த மலையை தோட்டிமலை என்றனர். அதனை பிற்காலத்தில் அங்குசகிரி என்று சமசுகிருதமயமாக்கி அழைக்கலாயினர் இம்மலையடிவாரத்தில்தான் இக்கோயில் உள்ளது.[1]

கோயில் வரலாறு

தொகு

ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் வட்டம், பேரிகை என்ற சிற்றூரில் அப்புராவ் என்ற சமீந்தார் வாழ்ந்துவந்தார். அவரின் கனவில் தோன்றிய திம்மராய சுவாமி மக்களின் குறைகளைப் போக்க தனக்கு சந்நிதி ஒன்றை அமைக்குமாறு கூறினார். இதையடுத்து மலைகள் சூழ்ந்த இந்த இடத்தில் ஆகமவிதிப்படி சமீந்தாரால் சந்நிதி அமைக்கப்பட்டது.[2]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலானது சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இயற்கை எழிலார்ந்த இடத்தில் அமைந்துள்ளது. கோயில் முகப்பில் திம்மராயரின் திருப்பாதங்கள் பதிக்கப்பட்டுள்ளன. கோயிலானது அகன்ற பிரகாரத்துடன், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை போன்ற அமைப்புளுடன் உள்ளது. கருவறையில் திம்மராயர் நிற்றக்கோலத்தில் காட்சியளிக்கிறார். உற்சவரான திம்மராய சுவாமியுடன் துளசி அம்மனும், இலட்சுமி தேவியும் உடன் உள்ளனர்.

அமைவிடம்

தொகு

ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒசூரில் இருந்து 33 கி.மீ தொலைவில் அங்குசகிரிகொத்தூர் உள்ளது.

திருவிழா

தொகு

இக்கோயிலில் சனிக்கிழமைகளில் குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருக்கல்யாண உற்சவம், தேர்த் திருவிழா, பல்லக்கு உற்சவம் என நான்கு நாட்கள் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது. விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர்.

உசாத்துணை

தொகு
  1. தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி.1, ஸ்ரீ திம்மராய ஸ்வாமி கோயில்- பேராசிரியர் தி.கோவிந்தன்
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 100–102. {{cite book}}: Check date values in: |year= (help)