அசிட்டமினோசலோல்
அசிட்டமினோசலோல் (Acetaminosalol) என்பது C15H13NO4.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(4-அசிட்டமிடோபீனைல்) 2-ஐதராக்சிபென்சோயேட்டு[1]
| |
இனங்காட்டிகள் | |
118-57-0 | |
ChEBI | CHEBI:250620 |
ChEMBL | ChEMBL92590 |
ChemSpider | 1907 |
EC number | 204-261-3 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
ம.பா.த | சலோபென் |
பப்கெம் | 1984 |
| |
UNII | O3J7H54KMD |
பண்புகள் | |
C15H13NO4 | |
வாய்ப்பாட்டு எடை | 271.27 g·mol−1 |
அடர்த்தி | 1.327 கி.செ.மீ −3 |
மட. P | 2.562 |
காடித்தன்மை எண் (pKa) | 7.874 |
காரத்தன்மை எண் (pKb) | 6.123 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 241.9 °C (467.4 °F; 515.0 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சாலிசிலிக் அமிலமும் பாராசிட்டமாலும் சேர்ந்து நிகழும் எசுத்தராக்கல் வினையில் விளைபொருளாக அசிட்டமினோசலோல் உருவாகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஒரு வலி நிவாரணியாக சலோபென் என்ற வர்த்தகப் பெயருடன் பேயர் என்பவரால் இச்சேர்மம் சந்தைப்படுத்தப்பட்டது.
செயல்பாடும் பயன்களும்
தொகுசூடான காரக் கரைசலில் அசிட்டமினோசலோல் சாலிசிலிக் அமிலமாகவும் பாராசிட்டமாலாகவும் உடைகிறது. ஊசிமூலம் உடலுக்குள் செலுத்தப்பட்டாலும் அசிட்டமினோசலோல் குடலுக்குள் சிதைவடைந்து விடுகிறது.
கடுமையான வாதநோய் சிகிச்சையில் சாலிசிலிக் அமிலத்திற்கு மாற்றாகவும், சிறுகுடல் வலி நிவாரணியாகவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பாதுகாப்பான குடல்வலி நிவாரணியான சலோலுக்கு சமமான சக்தி கொண்டதாகவும் அதைவிட பாதுகாப்பு மிக்கதாகவும் இது கருதப்பட்டது. சுவையற்றதாகவும் எளிமையாக பயன்படுத்தக்கூடியதாகவும் அசிட்டமினோசலோல் விளங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "salophen - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.