அசோபிலான்கோ

அசோபிலான்கோ (Ajoblanco; ajo blanco) என்பது பூண்டினைக் கொண்டு செய்யப்படும் எசுப்பானிய உணவு வகை ஆகும். குறிப்பாக கிரனாதா, மாலாகா, அந்தாலூசியா பகுதியின் சமையல் பாணி ஆகும். இந்த உணவு ரொட்டி, நொறுக்கப்பட்ட வாதுமைப் பருப்புகள், பூண்டு, தண்ணீர், இடலை எண்ணெய், உப்பு, சில சமயங்களில் வினிகர் கலந்து செய்யப்படுகிறது. இது பொதுவாக திராட்சைகள் அல்லது முலாம்பழம் துண்டுகளுடன் பரிமாறப்படுகிறது. பாதாம் பருப்பு இல்லா சூழ்நிலையில், போர் முடிந்த காலங்களில், உலர்ந்த அவரை மாவு பயன்படுத்தியும் செய்துள்ளனர். சில நேரங்களில் இவ்வுணவை "வெள்ளை காசுபசோ (gazpacho)" என்றும் அழைப்பர்.[1]

Ajoblanco
திராட்சைப்பழம் உள்ள அசோபிலான்கோ
மாற்றுப் பெயர்கள்Ajo blanco, white gazpacho
பரிமாறப்படும் வெப்பநிலைAppetiser
தொடங்கிய இடம்எசுப்பானியா
பகுதிஅந்தாலூசியா
பரிமாறப்படும் வெப்பநிலைகுளிர்ச்சி
முக்கிய சேர்பொருட்கள்வெதுப்பி, வாதுமைs, வெள்ளைப்பூண்டு, நீர், இடலை எண்ணெய்

திருவிழா தொகு

ஒவ்வொரு வருடமும், செப்டம்பர் 2 ஆம் நாளில், மாலாகாவிலுள்ள அல்மசார் (Almáchar) நகரத்தில், அசோபிலான்கோ திருவிழா நடத்தப்படுகிறது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Ajo Blanco - White Gazpacho | Cook (almost) Anything at Least Once". Cookalmostanything.blogspot.com. 2007-03-23. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச்சு 2024.
  2. Fiesta del ajoblanco web-page (in Spanish)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோபிலான்கோ&oldid=3912880" இலிருந்து மீள்விக்கப்பட்டது