அசோ-டை-கார்போனமைடு
அசோ-டை-கார்போனமைடு (Azodicarbonamide), அல்லது அசோ-பிசு-ஃபோர்மாமைடு (azobisformamide), என்னும் வேதிப்பொருளின் மூலக்கூறு வாய்பாடு C2H4O2N4.[1] இது மஞ்சள் நிறத்தில் இருந்து செம்மஞ்சள் சிவப்பு நிறம் வரையான நிறங்களில் காணப்படும் மணமற்ற படிகப் பொடி. இது உணவுப்பொருள்களில் சேர்க்கும் சேர்ப்பியாகப்பபயன்படுகின்றது; இது இதன் ஐ.எண் (E number) E927.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Carbamoyliminourea
| |
வேறு பெயர்கள்
Azodicarboxamide; Azobisformamide; C,C'-Azodi(formamide); Diazenedicarboxamide
| |
இனங்காட்டிகள் | |
123-77-3 | |
ChEMBL | ChEMBL28517 |
ChemSpider | 4575589 |
EC number | 204-650-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 31269 |
| |
UNII | 56Z28B9C8O |
பண்புகள் | |
C2H4N4O2 | |
வாய்ப்பாட்டு எடை | 116.08 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் -செம்மஞ்சள்/சிவப்புப் படிகத்தூள் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1] |
ஈயூ வகைப்பாடு | Harmful (XN) |
R-சொற்றொடர்கள் | R42 R44 |
S-சொற்றொடர்கள் | S22 S24 S37 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
உணவுச்சேர்ப்பி
தொகுஉணவில் சேர்க்கப்படும் ஒரு உணவுச்சேர்ப்பியாக அசோ-டை-கார்போனமைடு பயன்படுகின்றது, குறிப்பாக மாவுப்பொருளை வெள்ளையாக்கும் பொருளாகவும் விரைந்து நொதித்துப் பொங்கும் (உப்பும்) பொருளாகவும் பயன்படுகின்றது. இது மாவில் உள்ள ஈரப்பதத்துடன் வினைப்பட்டு ஆக்சைடாக்கும் பொருளாக இயங்குகின்றது[2] முக்கியமான வேதிவினையின் விளைபொருள் பை-யூரியா (biurea), இது சிறுநீருப்பாகிய யூரியாவில் பெறப்படும் பொருள்[3]; இப்பொருள் வெதுப்பக வேப்பில் (baking) சிதைவுறாமல் இருக்கின்றது. இரண்டாம்நிலை வினைகளின் விளைபொருள்களில் செமிகார்பாசைடும் (semicarbazide) [4] எத்தில் கார்பாமேட்டும்(ethyl carbamate).[5] அடங்கும். ஐக்கிய அமெரிக்காவிலும்கனடாவிலும் அசோ-டை-கார்போனமைடு 45 மில்லியனின் கூறுகள் (45 ppm) வரை சேர்க்கப்படலாம்.[6][7] ஆனால் ஆத்திரேலியாவிலும் ஐரோப்பாவிலும் உணவுச்சேர்ப்பியாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது[8]
பிற பயன்கள்
தொகுஅசோ-டை-கார்போனமைடின் முதன்மைப்பயன்பாடு நுரைபோன்ற வடிவம் கொண்டநெகிழிகளில் அப்படிப்பட்ட நுரைம வடிவ உருவாக்கிப்பொருளாகப்பயன்படுகின்றது. அசோ-டை-கார்போனமைடின் வெப்பவழி பகுப்பில் நைதரசன், கார்பன் -மோனோ-ஆக்சைடு, கார்பன் -டை-ஆக்சைடு, அமோனியா போன்ற வளிமங்கள் வெளிப்பட்டு வளிமக்குமிழிகளாக ஆகி நுரைம வடிவம் கொள்கின்றது.
அசோ-டை-கார்போனமைடு நெகிழிகள், செயற்கைத் தோல் போன்ற பொருள்கள் செய்யப் பயன்படுகின்றது. தூய அசோ-டை-கார்போனமைடு 200 °C வெப்பநிலையில் வினைப்படுகின்றது, ஆனால் நெகிழி, செயற்கைத்தோல் தொழிலகங்களில் மாற்றியமைக்கப்பட்ட அசோ-டை-கார்போனமைடு 170 °C வெப்பநிலையிலேயே வேதி வினைப்படுகின்றது.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ "Azodicarbonamide (CICADS)". Inchem. International Programme on Chemical Safety. Archived from the original on 2010-08-24. பார்க்கப்பட்ட நாள் 2010-08-14. Also published by World Health Organization, Geneva, 1999.
- ↑ "Azodicarbonamide FCC Grade (98%)". Garuda International, Inc. 2009-02-13. பார்க்கப்பட்ட நாள் 2010-08-14.
- ↑ Joiner, Robert; Vidal, Frederick; Marks, Henry (September 1963). "A New Powdered Agent for Flour Maturing". Cereal Chemistry 40: 539–553. http://www.aaccnet.org/publications/cc/backissues/1963/Documents/cc1963a67.html. பார்த்த நாள்: 2014-03-19.
- ↑ Becalski A, Lau BP, Lewis D, Seaman SW (2004-09-10). "Semicarbazide formation in azodicarbonamide-treated flour: a model study". Journal of Agricultural and Food Chemistry (Journal of Agricultural and Food Chemistry) 52 (18): 5730–4. doi:10.1021/jf0495385. பப்மெட்:15373416.
- ↑ Cañas, BJ; Diachenko, GW; Nyman, PJ (January 1997). "Ethyl carbamate levels resulting from azodicarbonamide use in bread". Food Additives & Contaminants 14 (1): 89–94. doi:10.1080/02652039709374501. பப்மெட்:9059587.
- ↑ "21CFR172.806". Code of Federal Regulations. April 1, 2012. http://www.accessdata.fda.gov/scripts/cdrh/cfdocs/cfCFR/CFRSearch.cfm?fr=172.806.
- ↑ Hong-Shum, edited by Jim Smith, Lily (2011). Food additives data book (2nd ed.). Chichester, West Sussex: Wiley-Blackwell. p. 548. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1405195430.
{{cite book}}
:|first=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Smith, Jim (2011-06-20). Food Additives Databook. Wiley-Blackwell. p. 548. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1405195430.