அஜந்தா
அஜந்தா (Ajanta) அல்லது அஜாந்தா என்பது இந்தியாவில் மகாராட்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது ஜள்காவ் மற்றும் அவுரங்காபாத்திற்கு இடையிலான சாலையில் அஜந்தா குகைகளுக்கு அருகில் உள்ளது.
அஜந்தா | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 20°32′00″N 75°45′00″E / 20.5333°N 75.7500°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | அவுரங்காபாத் |
ஏற்றம் | 586 m (1,923 ft) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
இணையதளம் | maharashtra |
புவியியல்
தொகுஅஜந்தா கிராமம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 586 மீட்டர் (1,923 ) உயரத்தில் அமைந்துள்ளது.[1]
வரலாறு
தொகுஅஜந்தா குகைகள் 1819ஆம் ஆண்டில் ஜான் சுமித் என்பவரால் இப்பகுதியில் வேட்டையாடும் போது கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்தக் கிராமம் மிகவும் பழமையானது. இது நிஜாம் ஷாஹி, முகலாயர்கள், ராஜ்புத் மற்றும் மராட்டிய உட்படப் பல ஆட்சியாளர்களால் ஆளப்பட்டுள்ளது. 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாகாடகப் பேரரசின் கீழ் இந்தக் கிராமம் உருவானது என்றும், தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இது ஒரு புத்த வம்சமாகும் என்றும் நம்பப்படுகிறது.
1632இல் தௌலாதாபாத் கோட்டை முற்றுகையின் போது ஷாஜகான் வெற்றி பெற்ற பிறகு, முகலாயர்களுக்கு அஜந்தா ஒரு முக்கிய கிராமமாக மாறியது. இந்தப் படையெடுப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஜெய்சால்மரைச் சேர்ந்த மகாராவல் பீம் சிங்கின் மகனான ராஜ்புத் சர்தார் நாது சிங்கிற்கு அஜந்தா கிராமம், வேதல்வாடி மற்றும் ஜஞ்சலா கோட்டையை ஷாஜகான் போரில் அவரது துணிச்சலுக்காக வழங்கினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ajanta, India Page". Falling Rain Genomics.