அஜ்மல் கசாப்

பாகிஸ்தான் பயங்கரவாதி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர்

மொகம்மது அஜ்மல் அமீர் கசாப் (Mohammed Ajmal Amir Kasab; செப்டம்பர் 1987 - நவம்பர் 21, 2012) 2008 மும்பாய் தாக்குதல்களில் பங்கெடுத்த ஓர் பாக்கித்தானிய தீவிரவாதி.[4][5] இந்தத் தாக்குதல்களின்போது பிடிபட்ட ஒரே தீவிரவாதியான கசாப் இந்தியாவில் தூக்கிலிடப்பட்டார். துவக்கத்தில் இவர் பாக்கித்தானி அல்லவென்று பாக்கித்தான் அரசு மறுத்து வந்தபோதும் சனவரி, 2009 இல் [6] இவரை பாக்கித்தானிய குடிமகனாக ஒப்புக்கொண்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த இந்திய நீதிமன்றம் மே 3, 2010 அன்று கசாப் கொலை, இந்தியா மீது போர் தொடுத்தல், வெடிகுண்டுகளை வைத்திருத்தல் இன்னும் பிற குற்றங்களைப் புரிந்ததாக தீர்ப்பு வழங்கியது.[7] அதே நீதிமன்றம் மே 6, 2010 அன்று நான்கு குற்றங்களுக்கு மரண தண்டனையும் ஐந்து குற்றங்களுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும் வழங்கியது. இதனை மும்பை உயர்நீதிமன்றம் பெப்ரவரி 21, 2011 அன்று உறுதி செய்தது.[8] மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதியாக மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆகத்து 29, 2012 அன்று இந்திய உச்ச நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது.[9] குடியரசுத் தலைவரிடம் அஜ்மல் கசாப் கோரிய கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சிறை அதிகாரிகள் நவம்பர் 21, 2012 காலையில் அஜ்மல் கசாப்பின் தண்டனையை நிறைவேற்றினர்.[3][10]

அஜ்மல் கசாப்
பிறப்பு(1987-09-13)13 செப்டம்பர் 1987 [1]
பரீத்கோட், ஓகாரா, பஞ்சாப், பாகிஸ்தான்
இறப்புநவம்பர் 21, 2012(2012-11-21) (அகவை 25)
புனே, இந்தியா[2]
நோக்கம்தீவிரவாதம்
தீர்ப்பு(கள்)கொலை
சதி
இந்தியா மீது போர்
வெடிமருந்து கையிருப்பு
தண்டனைமரணதண்டனை
தற்போதைய நிலைநவம்பர் 21, 2012 அன்று காலை 7:25க்குத் தூக்கிலிடப்பட்டார்
இடம் எரவாடா மத்திய சிறைச்சாலை, புனே[3]

தொடர்புள்ளவை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Megha Bahree (15 July 2011). "‘Kasab’s Birthday Is Sept. 13: Mumbai Police’". Mumbai, India: The Wall Street Journal. http://blogs.wsj.com/indiarealtime/2011/07/15/kasabs-birthday-is-sept-13-mumbai-terror-chief/?mod=WSJBlog. பார்த்த நாள்: 2011-07-15. 
  2. Mumbai gunman Kasab hanged on four year anniversary of attack, Business Week
  3. 3.0 3.1 Ajmal Kasab hanged today at 7:30 am today, Mumbaivoice.com, archived from the original on 23 நவம்பர் 2012, பார்க்கப்பட்ட நாள் 21 November 2012 பரணிடப்பட்டது 2012-11-23 at Archive.today
  4. "Planned 9/11 at Taj: Caught Terrorist". Zee News. 2008-11-29. http://www.zeenews.com/nation/2008-11-29/487150news.html. 
  5. "'Please give me saline'". Bangalore Mirror. 2008-11-29 இம் மூலத்தில் இருந்து 2009-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090302112856/http://www.bangaloremirror.com/index.aspx?page=article&sectid=1&contentid=2008112920081129095627277cedee9e0&sectxslt=. 
  6. "Surviving gunman's identity established as Pakistani". Dawn (Pakistani Newspaper). 2009-01-07 இம் மூலத்தில் இருந்து 2009-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5h7IXS0KL?url=http://www.dawn.net/wps/wcm/connect/Dawn%20Content%20Library/dawn/news/pakistan/surviving-gunmans-identity-established-as-pakistani-ss. பார்த்த நாள்: 2009-01-07. 
  7. Irani, Delnaaz (3 May 2010). "Surviving Mumbai gunman convicted over attacks". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/8657642.stm. பார்த்த நாள்: 3 May 2010. 
  8. "Kasab waged war against India: court". தி இந்து (Chennai, India). 2011 பிப்ரவரி 22. http://www.thehindu.com/news/national/article1478204.ece. பார்த்த நாள்: 22 FEB 2011. 
  9. "26/11 terror attacks case: SC upholds Kasab's death sentence and kasab should be fucked daily till the end of his life". The Indian Express. 29 August 2012. http://www.indianexpress.com/news/26-11-terror-attacks-case-sc-upholds-kasabs-death-sentence/994747/. 
  10. "மும்பை தாக்குதல் - பயங்கரவாதி கசாப்புக்கு தூக்கு நிறைவேறியது!". இந்நேரம்.காம். நவம்பர் 21, 2012. Archived from the original on 2012-11-28. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 21, 2012.

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மல்_கசாப்&oldid=3662049" இலிருந்து மீள்விக்கப்பட்டது