அஞ்சும் ஆனந்த்
அஞ்சும் ஆனந்த் (Anjum Anand) (பிறப்பு: ஆகஸ்ட் 15, 1971) ஒரு பிரித்தானிய உணவு வகைகளைப் பற்றி எழுதும் எழுத்தாளரும் இந்திய உணவுமுறைகளின் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். உடல்நல உணர்வுள்ள சமையல்காரருக்கு உணவளிக்கும் இந்திய சமையல் குறிப்புகளை உருவாக்கி எழுதிய முதல் எழுத்தாளர்களில் இவரும் ஒருவராக இருந்தார்.
அஞ்சும் ஆனந்த் | |
---|---|
2013 நவம்பரில் அஞ்சும் ஆனந்த் | |
பிறப்பு | 25 ஆகத்து 1971 இலண்டன், இங்கிலாந்து |
கல்வி | ஜெனீவா பல்கலைக்கழகம் |
பாணி | இந்திய உணவுமுறை |
தொலைக்காட்சி | கிரேட் புட் லைவ் அஞ்சும்மின் ஸ்பைஸ் ஸ்டோரீஸ் மார்கெட் கிச்சன் இந்தியன் புட் மேட் ஈஸி |
வலைத்தளம் | |
Official Site |
சுயசரிதை
தொகுஅஞ்சும் ஆனந்த் இலண்டனில் வளர்ந்தார். ஆனால் ஜெனீவா, பாரிஸ், மத்ரித் ஆகிய நாடுகளிலும் படித்தும் வசித்தும் வருகிறார்.[1][2] இவர் பிரெஞ்சு, எசுப்பானியம் போன்ற மொழிகளை பேசுகிறார். இலண்டன், ஐரோப்பிய வணிக நிர்வாகப் பள்ளியிலிருந்து ஐரோப்பிய வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்ற பிறகு, இந்திய சமையலில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள முடிவு செய்தார். குறிப்பாக, தனது சொந்த உணவை புத்துணர்ச்சியுடனும், இலகுவாகவும், எளிதாகவும் சமைத்தார். நியூயார்க்கிலுள்ள "கபே ஸ்பைஸ்", லாஸ் ஏஞ்சலஸிலுள்ள "மாண்ட்ரியன் உணவு விடுதி", புதுதில்லியில் உள்ள "பார்க் ராயல் விடுதி இந்திய உணவகம்" போன்ற புதுமையான உணவகங்களில் இவர் உலகம் முழுவதும் பணியாற்றியுள்ளார். மேலும் சில காலத்திற்கு கிழக்கு ஐரோப்பாவிலிருந்து தளவாடங்கள் இறக்குமதி செய்யும் ஒரு வணிகத்தையும் நடத்தினார்.[3]
பாரம்பரியமாக பணக்கார இந்திய உணவில் இருந்து ஆரோக்கியமான உணவுக்கு மாறுவது குறித்த இவரது கண்னோட்டம் வளர்ந்து வரும் போது இவருக்கு ஏற்பட்ட எடை பிரச்சினைகள் குறித்த தனிப்பட்ட அனுபவத்திலிருந்து வந்தது. இவரது உணவில் மாறுபட்ட பாரம்பரிய உணவுகள் இடம் பெற்றுள்ளன, ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு குறைவான எண்ணெயுடன் உருவாக்கப்படுகின்றன.[4] 25 வயதில் இந்தியன் எவ்ரி டே: லைட் ஹெல்தி இந்தியன் ஃபுட் என்ற இவரது முதல் புத்தகம் வெளியிடப்பட்டது. இது அமேசான்.காம் சிறந்த விற்பனையாளர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது .
இவர் 2004 முதல் 2007 வரை யு.கே.டி.வி புட் என்ற தொலைக்காட்சியில் கிரேட் ஃபுட் லைவ் என்ற நிகழ்ச்சியின் வழக்கமான விருந்தினராக ஆனார். மேலும் பிபிசி டூ என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தியன் ஃபுட் மேட் ஈஸி என்ற ஒளிபரப்பில் 2007 இல் தோன்றினார் .[2][5] இவரது உச்சரிப்பும் சுறுசுறுப்பான விதமும் இவரை "பிரிட்டனில் உள்ள இந்திய உணவுகளைப் பற்றிய எழுத்தாளரான நிகல்லா லாசன்" என்று அழைக்கப்படுவதற்கு வழிவகுத்தது.[6]
2007 முதல் தி டைம்ஸ் இதழின் இணையப் உணவு பக்கங்களுக்கு வழக்கமான பங்களிப்பாளராக இருந்து வருகிறார். பலவிதமான ஆரோக்கியமான முன்கூட்டியே தயாராக இருக்கும் இந்திய உணவுகளை உருவாக்க இவர் "பேர்ட்ஸ் ஐ" என்ற நிறுவனத்தின் சமையல் ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.[7] செப்டம்பர் 2008 இல் இவர் அஞ்சும்மின் நியூ இந்தியன் என்ற தனது மூன்றாவது செய்முறை புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நவம்பரில் ஒரு புதிய பிபிசி தொலைக்காட்சி தொடர் வெளியிடப்பட்டது.[2]
2011 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இவர் "தி ஸ்பைஸ் டெய்லர்" என்ற உணவு செய்முறையை அறிமுகப்படுத்தினார். இது இந்திய சாஸ்களை உருவாக்குகிறது.[8][9] இந்திய உணவின் பிராந்திய மற்றும் கலாச்சார மரபுகளை ஒரு உண்மையான உள் ஆர்வத்துடன் நேசிக்கிறார். இந்த ஆர்வத்தையும் அறிவையும் தனது பிபிசி 2 ஆறு பகுதித் தொடரான "இந்தியன் ஃபுட் மேட் ஈஸி" (2007) க்கு கொண்டு வந்தார். 2008 ஆம் ஆண்டில் இரண்டாவது தொடர் தொடங்கப்பட்டது, இது 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇங்கிலாந்தைத் தவிர, தில்லி, கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களிலும் இவர் தனது குடும்ப வீடுகளைக் கொண்டுள்ளார்.[10]
வெளியிடப்பட்ட படைப்புகள்
தொகு- Indian Every Day: Light, Healthy Indian Food (Headline Book Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7553-1201-5)
- Indian Food Made Easy (2007, Quadrille Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84400-571-0)
- Anjum's New Indian (2008, Quadrille Publishing, (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84400-616-8)
- Anjum's Eat Right For Your Body Type (2010, Quadrille Publishing, (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84400-757-8)
- I Love Curry (2010, Quadrille Publishing, (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84400-889-6)
- Anjum's Indian Vegetarian Feast (2012, Quadrille Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84949-120-4)
மேற்கோள்கள்
தொகு- ↑ Sethi, Anita, The Guardian (20 August 2008). "Indian made effortless".
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ 2.0 2.1 2.2 Arnstein, Victoria, Bookseller.com (11 July 2008) Some like it hot பரணிடப்பட்டது 6 செப்டெம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Edemariam, Aida, The Guardian (14 July 2007). "Move Over, Nigella".
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Melwani, Lavina, Little India (January 2005). "Eat, Drink and Be Svelte". Archived from the original on 29 August 2008.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ BBC Food. "Anjum Anand chef biog".
- ↑ Sethi, Anita, The Guardian (20 August 2008). "Indian made effortless".
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)Sethi, Anita, The Guardian (20 August 2008). "Indian made effortless". - ↑ LifeStyle FOOD Chef - Anjum Anand biography பரணிடப்பட்டது 31 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "The Spice Tailor by Anjum Anand". 16 May 2012.
- ↑ "The Spice Tailor, Anjum Anand". 16 May 2012. Archived from the original on 7 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 பிப்ரவரி 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ About Anjum பரணிடப்பட்டது 3 திசம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்