அஞ்செடிவா கோட்டை

அஞ்செடிவா கோட்டை(Fort Anjediva )இ ந்திய மாநிலமான கருநாடகாவின் கடற்கரையிலிருந்ததஅஞ்சதிப் தீவில் கட்டப்பட்ட து. இது கோவாவின் நிர்வாக அதிகார வரம்பில் இருந்தது. இக்கோட்டை ஒரு காலத்தில் போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் இருந்தது. அஞ்சதிப் தீவு 1.5 சதுர கிலோமீட்டர்கள் (0.58 sq mi) பரப்பளவு கொண்டது. [1]

தற்போது இடிந்த நிலையில் உள்ள இக்கோட்டை, போர்த்துகேய இந்தியா ஆட்சியில் சிறந்த வரலாற்றைக் கொண்டிருந்தது. இதன் அருகிலுள்ள தீவில் 1505 இல் கட்டப்பட்ட சர்ச் ஆஃப் அவர் லேடி ஆஃப் ஸ்பிரிங்ஸ் என்ற வரலாற்று சிறப்புமிக்க தேவாலயம் உள்ளது. அசிசியின் பிரான்சிஸ் தேவாலயமும் இங்கு அமைந்துள்ளது. ஆனால் இது இடிந்த நிலையில் உள்ளது.

பஞ்சதீவா தீவுக்கூட்டத்தில் உள்ள ஐந்து தீவுகளில் அஞ்சதிப் மிகப்பெரியது. அஞ்செடிவாவின் பெயருக்கு சொற்பிறப்பியல் உள்ளூர் தெய்வமான அஜதுர்கா தேவி ஒரு காரணம்.  


வரலாறு

தொகு

இந்தியாவிற்கான கடல்வழிப் பாதையில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருப்பதால், போர்த்துகீசியர்களால் இராணுவ இருப்பு மற்றும் கிழக்கு வர்த்தக பாதையின் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்காக அஞ்சதிப் தீவில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. [2] [3]

மார்ச் 1505 இல், டோம் பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா என்பவர் போர்த்துகீசிய மன்னர் முதலாம் இமானுவேலின் அரச பிரதிநிதியாகப் பணியாற்ற இந்தியாவுக்கு வந்தார். இவர் ஆசியாவின் முதல் நிரந்தரப் போர்த்துகீசிய பிரதிநிதி ஆவார். இந்தியாவில் நான்கு கோட்டைகளை நிறுவுவதற்கு அவருக்கு ஒரு "படையணி" அல்லது கட்டாய உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தன. அதில் இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் அஞ்சதிப் தீவில் உள்ள கோட்டையும் இருந்தது (மற்ற மூன்று கோட்டைகளும் கண்ணூர், கொச்சி மற்றும் கொல்லத்தில்முன்மொழியப்பட்டன) அங்கு கிரேக்கம், அரேபியா, எகிப்து மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகளிலிருந்து வரும் கடற்படை வணிகக் கப்பல்கள், இந்தியாவிலிருந்து வரும் மசாலாப் பொருட்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை ஏற்றிக்கொண்டு கிழக்கிலிருந்து செல்லும் வழியில் தண்ணீருக்காக நிறுத்தப்படும்.[4] [5] [6]

நீர்ப்பரப்பு நிலை

தொகு

மேலும், தீவின் இருப்பிடத்தில் சுமார் 1 மைல் (2 கி.மீ) நீளமும், அதன் கரையிலிருந்து கார்வாருக்கு 2 மைல் (3 கி.மீ) தெற்கே கோட்டை சுவருக்கும் கரையோரக் கோட்டிற்கும் இடையிலான பகுதியில் 6 முதல் 7 அடி வரை (11 முதல் 13 மீ) நீர் ஆழம் இருப்பதால், பாதுகாப்பான கோட்டையை உருவாக்க விரும்பினர். கோட்டையின் வெளிப்புற கடல் பக்கத்தில், நீரின் ஆழம் 10 முதல் 12 ஆழ அளவு (18 முதல் 22 மீ) என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் 4 மைல் (6 கி.மீ) தொலைவில், நீரின் ஆழம் 14 ஆழ அளவு (26 மீ) என்று கூறப்படுகிறது.

கட்டுமானம்

தொகு

போர்த்துகீசியர்களுடன் இணையக் கோரிய அழைப்பை பிஸ்னாகா மன்னர் ( விஜயநகர ) மறுத்துவிட்டதால், கோட்டையை கட்டும் பணியை அல்மேடா ஏற்றுக்கொண்டார். செப்டம்பர் 13, 1505 அன்று அவர் ஆங்கெடிபா வந்தவுடன், அவர் உற்சாகத்துடன் கோட்டையைக் கட்டத் தொடங்கினார். கோட்டை கட்டும் நடவடிக்கைக்கு விஜயநகரப் பேரரசரோ அல்லது அவரது உள்ளூர் குத்தகைதாரரோ, ஜெரோசோபாவின் தலைவரோ எதிர்க்கவில்லை. கட்டுமானப் பொருட்களான மரம், கரும்பு, பனை ஓலை, சுண்ணாம்பு போன்றவை உள்ளூர் மக்களால் உடனடியாக வழங்கப்பட்டன. கோட்டைக்காக பயன்படுத்தும் கற்களை எடுக்க தீவில் உள்ள ஒரு பழங்காலக் கோயில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோட்டையின் நிறைவு 21 நாட்கள் மற்றும் மூன்று மாதங்கள் எனவும், மேலும் பல்வேறு விதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. [7] கோட்டையின் அஸ்திவாரங்களின் அகழ்வாராய்ச்சியின் போது சிலுவையைத் தாங்கிய ஒரு கல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. எனவே இந்த தீவு ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களின் வாழ்விடமாக இருந்தது என்று பொருள் கொள்ளப்பட்டது.

கோட்டை சுவர் தரிசு மற்றும் பாறை மேற்பரப்பில் கட்டப்பட்டு, கோபுரங்களால் பலப்படுத்தப்பட்டது. [8] இந்தியாவில் போர்த்துகீசிய காலனித்துவ நலன்களைப் பாதுகாக்க இராணுவ பாதுகாப்பிற்காக கோட்டைகளை வழங்கியதால், இந்தக் கோட்டை மிகப்பெரிய செலவில் கட்டப்பட்டது. தீவில் சுண்ணாம்பு மற்றும் பிற பொருட்களின் பற்றாக்குறை இருந்ததால் கோட்டை சுவர்கள் பெரும்பாலும் களிமண் மற்றும் கல்லால் கட்டப்பட்டன. இருப்பினும், கட்டப்பட்ட கோட்டை எதிரிகளுடனான இராணுவ பரிமாற்றங்களுக்கு ஒரு நல்ல தளமாக கருதப்பட்டது.

குறிப்புகள்

தொகு
  1. Franciso S. d'abreu. "Anjediva — 1". by Colaco.net. Archived from the original on 2011-05-27. பார்க்கப்பட்ட நாள் 2009-10-10.
  2. "Anjidiv Island". பார்க்கப்பட்ட நாள் 2009-10-09.
  3. "Blessed Backwoods: Ancient Anjediva". Archived from the original on 2011-04-23. பார்க்கப்பட்ட நாள் 2009-10-10.
  4. {{cite book}}: Empty citation (help)
  5. "European Encroachment and Dominance". பார்க்கப்பட்ட நாள் 2009-10-11.
  6. Malabar manual. பார்க்கப்பட்ட நாள் 2009-10-10.
  7. Mathew, K.M. (1988). History of the Portuguese navigation in India, 1497-1600. Mittal Publications. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-046-8. பார்க்கப்பட்ட நாள் 2009-10-10.
  8. Horsburgh, James (1852). The India directory, or, Directions for sailing to and from the East Indies ... William H. Allen & Co. p. 653. பார்க்கப்பட்ட நாள் 2009-10-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்செடிவா_கோட்டை&oldid=2893473" இலிருந்து மீள்விக்கப்பட்டது