அடவிநயினார் அணை

தமிழக அணை

அடவிநயினார் அணை (Adavinainar Dam) தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் மேக்கரைக்கருகில் அச்சன்புதூர் பேரூராட்சியில் [3] அனுமந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது[2]. இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளது.

அடவிநயினார் அணை
அடவிநயினார் அணைக்கட்டு
அடவிநயினார் அணைக்கட்டு தோற்றம்
அடவிநயினார் அணை is located in தமிழ் நாடு
அடவிநயினார் அணை
அணைக்கட்டு அமைந்துள்ள பகுதி
நாடுஇந்திய ஒன்றியம்
அமைவிடம்மேக்கரை, செங்கோட்டை
புவியியல் ஆள்கூற்று9°04′00″N 77°14′16″E / 9.06667°N 77.23778°E / 9.06667; 77.23778ஆள்கூறுகள்: 9°04′00″N 77°14′16″E / 9.06667°N 77.23778°E / 9.06667; 77.23778
நோக்கம்நீர் பாசனம்
நிலைகட்டுமானம் முடிவுற்றது
கட்டத் தொடங்கியது1996
திறந்தது2002
கட்ட ஆன செலவு8.75 லட்சம் [1]
உரிமையாளர்(கள்)தமிழ்நாடு அரசு
இயக்குனர்(கள்)தமிழ்நாடு பொதுப்பணித் துறை
அணையும் வழிகாலும்
வகைPG
Impoundsஅனுமந்த நதி
உயரம்48.40 m (158.8 ft)[2]
நீளம்670 m (2,200 ft)[2]
வழிகால் அளவு356.79 m3/s (12,600 cu ft/s)[2]
மொத்தம் capacity4,963.82 m3 (4.02423 acre⋅ft)[2]


வரலாறுதொகு

செங்கோட்டை தாலுகா மேக்கரையில் 92 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் மழையின் காரணமாக எராளமான சேதங்கள், நிலச்சரிவு, உயிர் பலிகள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மேக்கரையில் தமிழக அரசு 132 அடி உயரத்தில் பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், வாவாநகரம், இடைகால், ஆய்க்குடி, சுந்தர பாண்டியபுரம், உள்ளிட்ட 10 ஊர்கள் நேரடியாகவும், மறைமுகமாக சில ஊர்களும் அப்பகுதியில் உள்ள மொத்தம் 15.ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெரும் விதம் அடவிநயினார் கோவில் அணையை கட்ட திட்டமிட்டு 1994 ஆம் ஆண்டு அதற்கான பணிகளையும் தொடங்கியது. 2002 ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப் பட்டது[4]

அணையின் நீரியல்தொகு

  • நீா்பிடிப்பு உயரம் – 47.20 மீட்டர்
  • அணையின் நீளம் – 670 மீட்டா்
  • அணையின் கொள்ளளவு – 175.00 மில்லியன் கனஅடி
  • நீா்பிடிப்பு பரப்பு – 15.54 சதுர கிமீ
  • அணையின் வழிந்தோடியின் எண்ணிக்கை – ஒன்று
  • அணையின் வழிந்தோடியின் அமைப்பு – கட்டுப்பாடற்ற தானாக வழிந்தோடக்கூடியது
  • அணையின் வழிந்தோடியின் நீளம் – 100 மீட்டர்
  • அணையின் மிகைநீா் வெள்ளோட்ட அளவு – 12600 கஅடி வி
  • அணையில் உள்ள மதகுகள் – 2 எண்ணம்
  • மொத்தஆயக்கட்டு – 7643.15 ஏக்கா்

2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அணையின் மூலம் சுமார் 7643.15 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

சுற்றுலா தளம்தொகு

சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இங்கு சாலை, சிறுவர் பூங்கா, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன [5]. குற்றாலப் பருவ நேரத்தில் தமிழக சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி கேரளா உட்பட பிற மாநில சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருவர்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடவிநயினார்_அணை&oldid=3293259" இருந்து மீள்விக்கப்பட்டது