அடிப்படை பொருளாதாரப் பிரச்சனைகள்

அடிப்படைப் பொருளியல் பிரச்சனை அல்லது அடிப்படை அல்லது மையப் பொருளியல் இடர்ப்பாடு அல்லது சிக்கல் (ஆங்கில மொழி: Economic problem, lit. 'Central Economic problem') எனும் பதம் பொருளியல் கருத்தாகும். இக்கருத்து எண்ணிலடங்காத மனிதத்தேவைகளை நிறைவுசெய்யும் அளவிற்கு வளங்கள் காணப்படாமையினை அதாவது கிடைப்பருமையினை உறுதிப்படுத்துகின்றது. மனிதனின் எண்ணற்ற தேவைகள் மற்றும் விருப்பங்களைப் போன்று வளங்களும் எல்லையற்றுக் காணப்படுமாயின், பொருளாதாரச் சிக்கல்கள் தோற்றமெடுக்காது. ஆயினும் வளங்கள் அவ்வாறு காணப்படாமையினால் சில அடிப்படைரச் சிக்கல்களுக்கு சமூகங்கள், நாடுகள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அவை[1][2][3]

  • எதனை உற்பத்தி செய்வது - (தெரிவுச்சிக்கல்)
  • எவ்வளவு உற்பத்தி செய்வது - (திட்டமிடற்சிக்கல்)
  • எவ்வாறு உற்பத்தி செய்வது - (தொழில்நுட்பச்சிக்கல்)
  • யாருக்காக உற்பத்தி செய்வது - (பகிர்வுச்சிக்கல்)

இவற்றிக்கு விடையளிப்பதற்காக நாடுகள், சமூகங்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள், சட்டதிட்டங்கள் அதாவது பொருளாதார முறைமைகள் வேறானவை.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Gregory, and Stuart, Paul and Robert (February 28, 2013). The Global Economy and its Economic Systems. South-Western College Pub. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1285055350. Economic system – A set of institutions for decision making and for the implementation of decisions concerning production, income, and consumption within a given geographic area.
  2. Samuelson, P. Anthony., Samuelson, W. (1980). Economics. 11th ed. / New York: McGraw-Hill. p. 34
  3. Schiller, Bradley. The Micro Economy Today, McGraw-Hill/Irwin, 2010, p. 15.