அடுக்குப் பாடல்கள்
அடுக்குப் பாடல்கள் ஓசை-அடுக்கிலும், எண்ணிக்கை அடுக்கிலும் காணப்படுகின்றன. ஒரு நிகழ்வின்மீது ஒத்த ஓசைப்பாக்கள் பல பாடல்களை அடுக்கிப் பாடப்பட்ட பாடல்கள் இசையடுக்குக் பாடல்கள்.
இசையடுக்கு
தொகுமூன்றடுக்குத் தாழிசை
- கலிப்பாவில் தாழிசைப் பாடல்கள் இசையடுக்குப் பாடல்களாக ஒரு நிகழ்வின் மீது மூன்றடுக்காக வருகின்றன.[1]
மூன்றடுக்கு வரியிசை
- சிலப்பதிகார வரிப்பாடல்கள் மூன்றடுக்காக வரும் இசையடுக்குப் பாடல்கள் [2]
- ஐங்குறுநூறு 10, 10 ஆக ஒத்த இசையுடன் அடுக்கிப் பாடப்பட்ட நூல்
எண்ணடுக்கு
தொகுஒரு பொபொருளின் மீது அடுக்கி வரும் பாடல்கள் ஒத்த ஓசை-அடுக்கு இல்லாமல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடுக்கி வருவதுண்டு. இவை எண்ணடுக்குப் பாடல்கள். இவற்றைப் பத்து என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். [3]
பத்தடுக்கு
- பதிற்றுப்பத்து ஒவ்வொருவர் மீதும் 10 பாடல்களை அடுக்கிப் பாடப்பட்ட நூல்
- திருக்குறள் ஒவ்வொரு தலைப்பிலும் 10 பாடல் கொண்ட நூல்
- தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், திருவிசைப்பா முதலான நூல்களிலும் 10 அடுக்கு முறைமை காணப்படுகிறது
- பிள்ளைத்தமிழ் நூல்கள்
பத்துக்கு மேலும் அடுக்கு
தொகு14 பாடல்கள் கொண்ட அடுக்கு
30 பாடல்கள் கொண்ட அடுக்கு
- சேது புராணம் பத்துக்கு மேற்பட்ட பல எண்ணிக்கைகளில் ஆங்காங்கே அடுக்கிப் பாடப்பட்ட துதிப்பாடல்களைக் கொண்ட நூல்
பல்வேறு எண்ணிக்கையில் அளவொத்த அடுக்கு
தொகுபஞ்சகம், அட்டகம், பதிகம், இரட்டைமணிமாலை, மும்மணிமாலை, நவமணிமாலை முதலான சிற்றிலக்கிய வகைகள் எண்ணிக்கையில் அளவொத்த அடுக்கு நூல்கள்.
அடிக்குறிப்பு
தொகு- ↑
- தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்,
- வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்;
- நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர்,
- அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்;
- கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்.
- சூடினர் இட்ட பூ ஓரன்னர்;
- ↑
- கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் 1
- இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
- கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
- பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் 2
- ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
- ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ;
- கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் 3
- எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
- முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
- ↑ பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து, ஐங்குறுநூறு குறிஞ்சி அன்னை பத்து,