அடோனிசு டெட்ரா

அடோனிசு டெட்ரா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
ஆக்டினோப்டெரிஜீ
வரிசை:
சராசிபார்ம்சு
குடும்பம்:
அலெசிடிடே
பேரினம்:
லெபிடார்லசு

டி. ஆர். இராபர்ட்சு, 1966
இனம்:
லெ. அடோனிசு
இருசொற் பெயரீடு
லெபிடார்லசு அடோனிசு
டி. ஆர். இராபர்ட்சு, 1966[1]

அடோனிசு டெட்ரா (Adonis tetra) (லெபிடார்லசு அடோனிசு) ஜெல்லிபீன் டெட்ரா என அழைக்கப்படுவது அலெஸ்ட்டீடே குடும்பத்தினைச் சார்ந்த மிகச் சிறிய ஆப்பிரிக்க மீனாகும். இது அடோனிசு பேரினத்தைச் சார்ந்த ஒரே ஒரு சிற்றினமாகும்.[2]

சரகம் தொகு

லெபிடார்லசு அடோனிசு அட்லாண்டிக் கரையோர கானா, சியேரா லியோனி மற்றும் கோட் டிவார் அருகிலுள்ள நன்னீர் வாழ்விடங்களில் காணப்படுகிறது.

அளவு தொகு

அடோனிஸ் டெட்ரா 2.1 செ. மீ. நீளமுடையது. இது நியான் டெட்ராவை விட மிகச் சிறியது. இது பொதுவாக மீன் காட்சியகங்களில் வளர்க்கப்படும் மிகச்சிறிய மீன்களில் ஒன்றாகும்.

காப்பு நிலை தொகு

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் அடோனிசு டெட்ரா அழிவாய்ப்பு இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது வசிக்கும் நீர்வாழிடங்களில் மாசு அளவு அதிகரித்து வருவது கவலை தருவதாக உள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. IUCN Red List: https://www.iucnredlist.org
  2. "Lepidarchus adonis". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. October 2011 version. N.p.: FishBase, 2011.
  3. Mercury pollution in Pra River: http://www.gradualchange.com/showabstract.php?pmid=16243381 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடோனிசு_டெட்ரா&oldid=3127139" இலிருந்து மீள்விக்கப்பட்டது