அண்டவியலாளர்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இது அண்டவியல் வரலாற்றுக்கும் அதன் பெருநிலைக் கட்டமைப்புக்கும் குறிப்பிட தக்க பங்களிப்பு செய்த அறிஞர்களின் பட்டியலாகும்.
- தோம் ஏபல் (1970–) விண்மீன் உருவாக்க முதனிலை பற்றிய ஆய்வு
- இராபர்ட்டோ ஆபிரகாம் (1965–) தொடக்கநிலைப் பால்வெளிகளின் வடிவ ஆய்வு
- கன்னேசு ஆல்ப்வேன் (1908–1995) மின்ம மின்னோட்டங்களால் பால்வெளிக் காந்தப்புலங்கள் உருவாதலின் கோட்பாட்டாக்கம்
- இரால்ப் ஆழ்சர் ஆல்ப்பர் (1921–2007) அண்டக் கதிர்வீச்சுப் பின்னணியை முன்கணித்தல், பெருவெடிப்புப் படிமத்தில் இருந்து நீரக, எல்லிய விகிதங்களை விளக்கல்
- அரிசுட்டார்க்கசு (கிமு 310–230)சூரியமையக் கோட்பாட்டை முதலில் அறிவித்தவர்
- அரிசுட்டாட்டில் (கிமு 384–322 ) புவிமையக் கோட்பாட்டை அறிவித்தவர். பலநூற்றாண்டுகள் இத் பின்பற்றப்பட்டது
- ஆரியபட்டர் (கிபி 476–550) மெதுவான, வேகமான புறசுழற்சியோடு கூடிய புவிமையக் கோட்பாட்டுப் படிமம் உருவாக்கியவர்