அண்ணன் தங்கச்சி

சரண்ராஜ் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அண்ணன் தங்கச்சி (Annan Thangachi) 1999 ஆம் ஆண்டு சரண்ராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில், சுருதி மற்றும் விக்ரம் கிருஷ்ணா நடிப்பில், தேவா இசையில், சி.கல்பனா மற்றும் சி. தேவேந்திரராஜ் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இப்படம் சரண்ராஜ் மற்றும் சுருதி நடித்த கன்னடத் திரைப்படமான தவரினா தொட்டிலுவின் மறுஆக்கம் ஆகும்[1][2].

அண்ணன் தங்கச்சி
இயக்கம்சரண்ராஜ்
தயாரிப்புசி. கல்பனா
சி. தேவேந்திரராஜ்
கதைபொன்னியின் செல்வன் (வசனம்)
திரைக்கதைசரண்ராஜ்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி.வி. கிருஷ்ணபிரகாஷ்
படத்தொகுப்புஎம். என். ராஜா
கலையகம்ஓம் ஸ்ரீ விநாயகா பிலிம்ஸ்
வெளியீடுமே 7, 1999 (1999-05-07)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

தொகு

சின்னராசு (சரண்ராஜ்) தன் தங்கை சரசுவுடன் (சுருதி) வசிக்கிறார். அவர்களது வீட்டில் வசிக்கும் உறவினர் அழகு (பாண்டு). சின்னராசு தன் தங்கைக்குத் திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடுகிறார்.

சூதாடியான கோடீஸ்வரன் (ஜனகராஜ்) தன் மகன் பாஸ்கருக்கு (விக்ரம் கிருஷ்ணா) வரதட்சணை அதிகமாகத் தரும் வசதியான பெண்ணாகத் தேடுகிறார். ஆனால் வங்கியில் பணிசெய்யும் பாஸ்கர் நல்ல குணமுடையவன். திருமணத் தரகரான சிட்டியின் (தலைவாசல் விஜய்) உதவியால், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக பொய்கூறும் கோடீஸ்வரனின் மகன் பாஸ்கருக்கு சரசுவைத் திருமணம் செய்துவைக்கிறார் சின்னராசு. திருமணத்திற்குப் பிறகு சரசுவை வரதட்சணையாக அதிகம் பணம், நகை கேட்டு துன்புறுத்தத் தொடங்குகிறார் கோடீஸ்வரன்.

திருமணத்திற்குப் பிறகு தனக்குத் தரவேண்டிய தரகுப் பணத்தைக் கேட்கும் சிட்டிக்கு பணத்தைக் கொடுக்காமல் அவமானப்படுத்தி அனுப்புகிறார் கோடீஸ்வரன். ஆத்திரம் கொள்ளும் சிட்டி, கோடீஸ்வரன் பற்றிய உண்மைகளை அழகுவிடம் சொல்கிறான்.

சின்னராசு, யசோதாவைத் திருமணம் செய்கிறான். சரசுவிற்குப் பெண் குழந்தை பிறக்கிறது. தன் நிலங்களை விற்று தன் தங்கைக்கு தொடர்ந்து வரதட்சணை தருகிறான் சின்னராசு. அவை அனைத்தையும் சூதாடி இழக்கிறான் கோடீஸ்வரன். பாஸ்கர் வேலையை இழக்கிறான். அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

தொகு

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் பொன்னியின் செல்வன்[3].

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 மஞ்சள் காத்து கிருஷ்ணராஜ், ஹரிஷ் 5:18
2 சிவப்பு கல்லு சங்கீதா, ஹரிஷ் 4:57
3 பலான பலான தேவா, சபேஷ் 4:33
4 தங்கச்சி கிருஷ்ணராஜ், அனுராதா ஸ்ரீராம் 5:10
5 சின்ன ராசு கிருஷ்ணமூர்த்தி , கிருஷ்ணராஜ், அம்மாபேட்டை 0:51
6 பாம் பாம் கிருஷ்ணராஜ் 0:59
7 போகுதம்மா கிருஷ்ணராஜ் 1:36

மேற்கோள்கள்

தொகு
  1. "அண்ணன் தங்கச்சி".
  2. "அண்ணன் தங்கச்சி". Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "பாடல்கள்". Archived from the original on 2017-07-07. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணன்_தங்கச்சி&oldid=4000623" இலிருந்து மீள்விக்கப்பட்டது