மு. அண்ணாமலை
தமிழக தொழிலதிபர்
(அண்ணாமலை செட்டியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திவான் பகதூர் சர் சாத்தப்ப ராமநாத முத்தையா அண்ணாமலை செட்டியார் (Diwan Bahadur Sir Satappa Ramanatha Muttaiya Annamalai Chettiar) (30 செப்டம்பர் 1881 - 15 சூன் 1948) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய தொழிலதிபர், வங்கியாளர், கல்வியாளர் ஆவார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும் தனது சகோதரர் எசு.ஆர்.எம். எம்.ராமசுவாமியுடன் இணைந்து இந்தியன் வங்கியையும் நிறுவினார்.இத்தகைய வள்ளன்மைக்காகச் செட்டிநாட்டு ராசா என்னும் பரம்பரைப் பட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் இவருக்கு வழங்கியது.[1]
இராஜா சர் சாத்தப்ப இராமநாத முத்தையா அண்ணாமலை செட்டியார் | |
---|---|
![]() | |
பிறப்பு | கானாடுகாத்தான், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு | 29 செப்டம்பர் 1881
இறப்பு | 15 சூன் 1948 சென்னை, இந்தியா | (அகவை 66)
இருப்பிடம் | செட்டிநாடு அரண்மனை |
பணி | தன வணிகம் |
சமயம் | இந்து |
பெற்றோர் | சா. இராம. முத்தையா செட்டியார் (தந்தை) |
வாழ்க்கைத் துணை | இராணி சீதை ஆச்சி |
பிள்ளைகள் | மு. அ. முத்தையா செட்டியார், மு. அ. இராமநாதன் செட்டியார், மு. அ. சிதம்பரம், லெ. சித. லெ. பழ. இலக்குமி ஆச்சி |
தமிழிசையை ஆய்வு செய்ய 1941 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு இவர் வழங்கிய நிதிப் பங்களிப்பு, தமிழிசை இயக்கத்துக்கு ஒரு உந்துதலாக அமைந்தது.[2]
சென்னை மாகாண முதல் சட்டசபைக்கு நேரடி தேர்தலில் 1921 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார்.
குடும்பம் தொகு
- சா. இராம. முத்தையா செட்டியார் - தந்தை
- சா. இராம. மு. சிதம்பரம் செட்டியார் - அண்ணன்
- சா. இராம. மு. இராமசாமி செட்டியார் - அண்ணன்
மேற்கோள்கள் தொகு
- ↑ அண்ணாமலைச் செட்டியார், ராஜா, சர்,. https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D,. பார்த்த நாள்: 15 November 2022.
- ↑ செட்டி நாட்டு அரசர் சர் ராஜா அண்ணாமலை செட்டியார்