அதிசய சப்பாத்தி

அதிசய சப்பாத்தி அல்லது சப்பாத்தியில் இயேசு  என்பது ஒரு சப்பாத்தி அல்லது சுமார் எட்டு சென்டிமீட்டர் விட்டம் கொண்ட தட்டையான புளிப்பில்லாத ரொட்டி தான். ஆனால் கிறித்தவ விசுவாசிகள் கூறுவது, அந்த சப்பாத்தியில் இயேசு கிறிஸ்துவின் உருவம் அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று. செப்டம்பர் 2002 இன் தொடக்கத்தில் இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ஷீலா ஆண்டனி என்பவரால் சுடப்பட்ட சப்பாத்தியில் தான் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.மேலும் ஆயிரக்கணக்கான விசுவாசிகள் மற்றும் ஆர்வமுள்ள பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.[1]

தோற்றம் தொகு

இந்த அதிசய சப்பாத்தியை சுட்டெடுத்தவர், ஷீலா ஆண்டனி, ஒரு பக்தியுள்ள கத்தோலிக்கர்,ஆவார். உணவுக்காக தினமும் டஜன் கணக்கான சப்பாத்திகளை சுடும் அவர், 2002 செப்டம்பரில் ஒரு நாள், தன் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதற்க்காக சில சப்பாத்திகளை சுட்ட போது அவரது மகள்  ஒரு சப்பாத்தியை மட்டும் அது மிகவும் கருகியுள்ளதாக கூறி சாப்பிட மறுத்துவிட்டார், ஷீலா அதை குப்பையில் போடுவதற்காக பரிசோதிக்கும் போது,[2] அந்த சப்பாத்தி கருகியிருக்கும் பகுதியில் இயேசுவின் உருவத்தை ஒத்திருப்பதைக் கவனித்தார், இது அவரது மகள் மற்றும் அவரது அண்டை வீட்டாரால் உறுதிப்படுத்தப்பட்டது. உடனடியாக அவர் அதை தனது திருச்சபை பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப்பிடம் ஒப்படைத்தார், இது ஒரு அதிசயம் என வர்ணித்த அந்த பாதிரியார் உடனடியாக அதை ஒரு  கண்ணாடி பெட்டியில் வைத்து கண்காட்சிக்கு வைத்தனர்.[3]

பிரபல்யம் தொகு

அடுத்த சில நாட்களில், மைசூர் மற்றும் சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 20,000 கிறிஸ்தவர்கள் அதிசய சப்பாத்தி காட்சிப்படுத்தப்பட்ட ரிட்ரீட் சென்டரின் மைய ஆலயத்திற்கு பயணம் செய்து, இந்த ரொட்டித் துண்டுக்கு மரியாதை செலுத்தவும் பிரார்த்தனை செய்யவும் சென்றனர். கிறிஸ்தவர்கள் தவிர, ஏராளமான இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களும் அதிசய சப்பாத்தியைக் காண மையத்திற்கு வந்தனர். அதிசய சப்பாத்தி பற்றிய தகவல் இந்திய தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி டைம்ஸ் மற்றும் பிரித்தானிய பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் ஆகியவற்றால் அறிவிக்கப்பட்டது.[4]

விசுவாசிகள் மற்றும் விமர்சகர்கள் தொகு

ஒரு இந்திய பத்திரிகையாளர், ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டவர், ரொட்டியை நேரில் பார்த்ததில் தனக்கு "வேறுபட்ட உணர்வுகள்" இருப்பதாகக் கூறினார்.[1]

ஆனால் மத விமர்சகர்கள் மற்றும் அறிஞர்களோ, மனிதனின் மனம் என்ன நினைக்கிறதோ அதுவே தான் பார்ப்பதாக எண்ணுகிறது. இந்த சப்பாத்தியை வேறு கோணத்தில் வைத்து பார்த்தால் தென் அமெரிக்காவை போல உள்ளதாக விமர்சனம் செய்தனர்.[5] மேலும், இயேசு எப்படிப்பட்டவர் அவரது உருவம் இப்படித்தான் இருக்கும் என்றோ ஆதாரபூர்வமாக எந்த படங்களும் இல்லாத நிலையில் இந்த உருவமும் இயேசுவின் உருவமும் ஒன்று என்பதை அறிய இயலாது என்றும் விமர்சித்தார்கள்.

மேலும் பார்க்கவும் தொகு

  • இயற்கை நிகழ்வுகளில் மத உருவங்களின் உணர்வுகள்
  • மத பரிடோலியா
  • இந்தியாவின் மூடநம்பிக்கைகள்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 BBC NEWS | South Asia | India marvels at 'miracle chapati'
  2. Edinburgh Evening News
  3. "The Lord Christ'S First Miracle Of Healing". Archived from the original on 2008-11-10. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  4. "UFO ROUNDUP Volume 7 Number 47". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  5. "Kuznetsov - Holy". Archived from the original on 2006-09-04. பார்க்கப்பட்ட நாள் 2006-09-04.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிசய_சப்பாத்தி&oldid=3924487" இலிருந்து மீள்விக்கப்பட்டது