அதியமான் கோட்டை சென்னராயப் பெருமாள் கோயில்

அதியமான் கோட்டை சென்னராயப் பெருமாள் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் உள்ள ஒரு வைணவக் கோயிலாகும்.[1] இது இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் கோயிலாக உள்ளது.

அருள்மிகு சென்னராயப் பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தருமபுரி
அமைவிடம்:அதியமான் கோட்டை, தருமபுரி வட்டம்
சட்டமன்றத் தொகுதி:தருமபுரி
மக்களவைத் தொகுதி:தருமபுரி
கோயில் தகவல்
மூலவர்:சென்னராயப் பெருமாள்
சிறப்புத் திருவிழாக்கள்:4ம் சனி

கோயிலின் பழமை

தொகு

இக்கோயிலில் எந்தக் கல்வெட்டுகளும் இல்லை என்றாலும், இக்கோயிலின் மகாமண்டபத்தின் விதானத்தில் மகாபாரத, இராமாயண காட்சிகளை விளக்கும் பழங்கால சுவரோவியங்கள் உள்ளன. இவை சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்தவையாகக் கருதப்படுகிறன.[2]

கோயிலமைப்பு

தொகு

இக்கோயில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்ட கோயிலாகும். திருவண்ணாழியில் திருமகள், நிலமகள் ஆகியோருடன் சென்னராயப் பெருமாள் நின்ற கோலத்தில் உள்ளார். பெருமாளில் நான்கு கரங்களில், பின்னிரு கரங்களில் சங்கும், சக்கரமும் முன்னிரு கரங்களில் வலக்கை வரத முத்திரையுடனும், இடக்கை தொடையில் பதிந்தபடியும் உள்ளன. அர்த்தமண்டபத்தில் வலப்புரத்தில் ஆழ்வார்களான நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய மூவரின் திருஉருவங்கள் உள்ளன. கோயிலின் விமானம் மூன்று தளங்களைக் கொண்டு கோயில் கிழக்கு நோக்கி உள்ளது.

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "அருள்மிகு சென்றாய பெருமாள் கோவில்,அதியமான் கோட்டை". அறிமுகம். http://kalabairavar.dpi.net.in. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2016. {{cite web}}: External link in |publisher= (help)
  2. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். p. 115.