அதீல் அப்தெல் அஜீஸ்
அதீல் அப்தெல் அஜீஸ் ( Hadeel Abdel Aziz ) என்பவர் ஜோர்தானைச் சேர்ந்த சட்ட வல்லுனரும் மற்றும் மனித உரிமை பாதுகாலவலரும் ஆவார். இவர் ஜோர்தனை தளமாகக் கொண்ட அரசு சார்பற்ற அமைப்பான சட்ட உதவிக்கான நீதி மையத்தின் நிறுவன உறுப்பினர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.[1][2][3] நீதித்துறை சீர்திருத்தம், நீதிமன்ற தன்னியக்கமாக்கல், மற்றும் இசுலாமியச் சட்ட முறைமை உட்பட உரிமையியல் சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு உதவும் சட்ட உதவி மையங்களின் வலையமைப்பு மூலம் நீதித் திட்டங்களுக்கான அணுகலை வழங்குதல் ஆகியவை இவரது பணிகளில் அடங்கும்.[4][5]மார்ச் 8 அன்று, இவர் 2023 இன் துணிச்சல் மிக்க பெண்களுக்கான சர்வதேச விருதினை பெற்றுள்ளார்.[6] இவருடன் சேர்ந்து ஜில் பிடன் மற்றும் அந்தோனி ஜே. பிளிங்கன் ஆகியோருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறையால் இவ்விருது வழங்கப்பட்டது.[7][8][9] பிரான்சிற்கும் மேற்கு ஜெர்மனிக்கும் இடையிலான நட்புறவு ஒப்பந்தமான எலிசி ஒப்பந்தத்தின் 60 வது ஆண்டு விழாவில் 22 ஜனவரி 2023 அன்று இவருக்கு மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்காக வழங்கப்படும் பிராங்கோ-ஜெர்மன் பரிசு வழங்கப்பட்டது.[10][11]
அதீல் அப்தெல் அஜீஸ் | |
---|---|
2023 இல் அதீல் அப்தெல் அஜீஸ் | |
தாய்மொழியில் பெயர் | هديل عبد العزيز |
தேசியம் | ஜோர்தானியர் |
கல்வி | ஜோர்தான் பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலைச் சட்டம் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்திலிருந்து நீதித்துறை நிர்வாகி எனச் சான்றிதழ் . |
பணி | சட்ட உதவிக்கான நீதி மையத்தின் நிறுவனர், நிர்வாக இயக்குநர் F நீதிமன்ற நிர்வாக பிரிவு மேலாளர், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முகமை |
செயற்பாட்டுக் காலம் | 2004-தற்போது வரை |
அமைப்பு(கள்) | சட்ட உதவிக்கான நீதி மைய |
விருதுகள் | சர்வதேச வீரதீரப் பெண்கள் விருது. மனித உரிமை மற்றும் சட்ட ஆட்சிக்கான பிரான்கோ-ஜெர்மன் விருது. ஐசனோவர் சகா. |
வலைத்தளம் | |
www |
அப்தெல் அஜீஸ் ஜோர்தான் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் பெற்றவர். மேலும், மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தால் நீதித்துறை நிர்வாகியாக சான்றிதழ் பெற்ற முதல் ஜோர்தனியர் ஆவார்.[12]
சட்டரீதியான அதிகாரமளிக்கும் பணி
தொகுஜோர்தானை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கமற்ற மற்றும் அரசு சாரா அமைப்பான சட்ட உதவிக்கான நீதி மையத்தில் இவரது பணி தாழ்த்தப்பட்டோருக்கான சேவையை வழங்குவதாகவும் சட்டப்பூர்வ அதிகாரமளிப்பில் ஒட்டுமொத்த கவனம் செலுத்தி அரசு நிதியுதவி பெறும் சட்ட உதவிக்காக வாதிடுவதாகவும் அறியப்படுகிறாது. "சட்டத்தை சராசரி நபரின் கைகளில் வைப்பது" அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சமூகங்களை ஆதரிக்கும் வகையில் மக்களுக்குக் கற்பிக்க வடிவமைக்கப்பட்ட கருவிகள் மூலம் வழிசெலுத்தல் மற்றும் தீர்வுகள் மற்றும் கருவிகளை அமைக்கவும் இவர் உதவுகிறார்.
மனித உரிமை பாதுகாவலர்
தொகுஇளம் சிறார், புலம் பெயர்ந்தோர், ஏதிலிகள் மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையில் இருந்து தப்பியவர்கள் உட்பட பல்வேறு ஒதுக்கப்பட்ட குழுக்களின் முன்னணிப் பாதுகாவலராக,[6] ஜோர்தானில் நீதி அமைப்பை வலுப்படுத்த உதவும் தெளிவான பார்வையை வெளிப்படுத்தியதற்காக[13] அமெரிக்க மத்திய அரசின் நிர்வாகத் துறை அஜீஸைப் பாராட்டியது. கெளரவக் குற்றங்களுக்கு எதிரான இவரது வழக்கறிஞர் பணி- பெண்களை அவர்களின் சொந்த "பாதுகாப்பு"க்காக காவலில் வைப்பதும் சிறப்பிக்கப்பட்டது. மனித உரிமைகளுக்கான தேசிய மையத்தில் அறங்காவலர் குழுவாக, இளம் ஜோர்தானிய நிருபர்களுக்கு உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளில் விவரங்களின் முக்கியத்துவத்தை இவர் எடுத்துரைத்தார்.[14][15]
பெண்கள், குழந்தைகள் மற்றும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
தொகுஇவரது மற்ற முயற்சியில் சர்ச்சைக்குரிய ஜோர்தானின் பலியல் வன்கலவிச் சட்டம், பிரிவு 308 ஐ ஒழிக்க வாதிடுவது மற்றும் குற்றவாளிகளைத் துன்புறுத்துவதைச் செயல்படுத்துவது ஆகியவை அடங்கும்.[16][17][18][19] ஐக்கிய நாடுகள் அவையில் ஒரு புகழ்பெற்ற குழுவில் இவர் தனது பணியை முன்னிலைப்படுத்தினார்.[20] மேலும் உலக வங்கியின் நிதியுதவி திட்டங்கள் மற்றும் பிற தளங்களிலும் பங்கேற்றார்.[13][21][22] ஐ.நா குழுவில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலகளாவிய காங்கிரஸ் நிகழ்வின் போது, பயங்கரவாத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்தார்.[20]
துணிச்சல் மிக்க பெண்களுக்கான சர்வதேச விருது
தொகுஅஜீஸ் 2023 இல் வெளியுறவுத்துறையால் விதிவிலக்கான வீரம் வலிமை மற்றும் தலைமையை வெளிப்படுத்தியவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பாக வழங்கப்படும் துணிச்சல் மிக்க பெண்களுக்கான சர்வதேச விருதைப் பெற்றுள்ளார். மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டப்பூர்வமாக பின்தங்கியவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் இவர் செய்த பணி அங்கீகரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Home Page | Justice Center for Legal Aid". JCLA (in ஆங்கிலம்). Archived from the original on 2023-04-22. பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ "Jordan: Treating rights as rights". Namati (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ Wendy (2019-08-20). "Hadil Abdelaziz". Asia Pro Bono Conference & Access to Justice Exchange (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ "Justice Center for Legal Aid". Namati (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ "Justice Center for Legal Aid". Namati (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ 6.0 6.1 "2023 International Women of Courage Award". U.S. Department of State. 8 March 2023. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.
- ↑ AP, Manuel Balce Ceneta-staff. "Jill Biden Women". The Herald Journal (in ஆங்கிலம்). Archived from the original on 2023-03-12. பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
- ↑ "11 women, girls and women protesting Iranian morality police, honored at IWOC Awards". ABC27 (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-03-08. Archived from the original on 2023-04-01. பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.
- ↑ "2023 International Women of Courage Awards". VOA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ "Jordanian advocate Hadeel Abdel Aziz receives Franco-German Prize for Human Rights and the Rule of Law". Jordan Times (in ஆங்கிலம்). 2023-01-22. பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ "Jordanian advocate awarded Franco-German Prize for Human Rights". Arab News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ "Hadeel Abdel Aziz". World Justice Project (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ 13.0 13.1 "World Bank Selects JCLA to Provide the Nigerian Government with Technical Support | Justice Center for Legal Aid". Justice Center for Legal Aid (in ஆங்கிலம்). 2015-08-03. Archived from the original on 2023-04-22. பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ "JMI trains a new generation of young journalists". Jordan Media Institute. 16 January 2020. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.
- ↑ "JBA denounces legal aid centres as 'harming the profession' - Legal aid centres say they address rising need for legal representation among fragile groups". http://jordantimes.com/news/local/jba-denounces-legal-aid-centres-harming-profession%E2%80%99.
- ↑ "Jordanian Parliament abolishes law that allowed rapists to avoid prosecution by marrying their victims". UN Women – Headquarters (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ Tahhan, Zena Al. "'Historic day' as Jordanian parliament repeals rape law". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ "Jordan may end reviled law on rape". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ Refugees, United Nations High Commissioner for. "Refworld | Jordan: The penalty for rape; legal penalties for failing to complete a court-ordered probation, where, and if, that is the sentence". Refworld (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ 20.0 20.1 "Day Two - Session 7: Parallel breakout sessions – The importance of access to justice for victims of terrorism | Office of Counter-Terrorism". www.un.org. பார்க்கப்பட்ட நாள் 2023-04-14.
- ↑ "JORDAN RULE OF LAW AND ANTI-CORRUPTION ASSESSMENT" (PDF). United States Agency for International Development. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.
- ↑ "Middle East and North Africa CMI: Support to Open Government Reforms". World Bank. 4 April 2016. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023.