அத்தார் ஜமாத் மஸ்ஜித்
அத்தார் ஜமாத் மஸ்ஜித் ( அரபு மொழி: اثار جماعة المسجد ; ஆங்கில மொழி: Athar Jamad Masjid ; The Big Mosque என்றும் அழைக்கபடுகிறது) இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் நகர் மண்டபம் (டவுன் ஹால்) பகுதியில் ஒப்பணக்கார தெருவில் அமைந்துள்ளது. இது கோயம்புத்தூரின் பழமையான மற்றும் மிகப் பெரிய மசூதி ஆகும். இது இந்நகரின் வரலாற்றுக்கு ஒரு சாட்சியாக உள்ளது. [1]
அத்தார் ஜமாத் மஸ்ஜித் The Big Mosque | |
---|---|
அமைவிடம் | ஒப்பணக்கார வீதி, கோயம்புத்தூர் |
நிறுவப்பட்ட ஆண்டு | 1904 |
பிரிவு/பாரம்பரியம் | இஸ்லாம் |
இமாம் | தலைவர்: M. S. அப்துல் ரஷீது |
கட்டிடக்கலைத் தகவல்கள் | |
கொள்ளளவு | 2000 |
நீளம் | - |
மினாரா(க்கள்) | 4 |
மினாரா உயரம் | 85 அடி (26 m) |
வரலாறு மற்றும் கட்டுமானம்
தொகுதிருநெல்வேலியிலிருந்து வந்த அத்தர் என்ற வாசனை வியாபாரிகள், இந்த நினைவுச்சின்ன கட்டமைப்பை கட்டினார்கள். அந்த கட்டுமானம் நிறைவடைய 44 ஆண்டுகள் பிடித்தன. கட்டுமான பணிகள் 1860 ஆம் ஆண்டில் தொடங்கி 1904 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. இந்த வலுவான கட்டமைப்பை சுண்ணாம்பு மற்றும் வெள்ளை முட்டைகளைப் பயன்படுத்தி பளபளப்பான வடிவத்தில் கட்டப்பட்டது. அங்கு திறந்த முற்றத்தில் தொழுகை கூடங்கள் அமைக்க பாதுகாப்பாக முகப்பினால் மூடப்பட்டிருக்கும். தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய நூலகம் மற்றும் ஒரு மூடப்பட்ட சடங்கோடுகூடிய குளம் ஒன்று உள்ளது. ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயார் செய்ய ஒரு சமையலறை உள்ளது. நடைபாதை வியாபாரிகள் தமது வண்ணமயமான தாயத்துக்கள் மற்றும் வழிபாட்டு பொருட்களை கொண்டு நுழைவாயிலில் விற்பனை செய்வார்கள்.
கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய இந்திய தேசிய அறக்கட்டளையின் படி (INTACH), குவிந்த கூரைகள் போன்ற மண்டபத்தில் இரண்டு மினார்கள், வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களிலும், 85 அடி உயரம் உள்ளது. இந்த வெள்ளி குவிமாட ஜோடி டவுன் ஹால் பகுதியில் மேகம் தொடும் காட்சியாக அமைந்துள்ளது. இவை சுவர்க்கத்தின் வாயில்கள் (ஜன்னா) எனவும் கொள்ளலாம். வரைபடிந்த கண்ணாடி மற்றும் மேலே நான்கு பள்ளி மினார்களை கொண்டும் வாயில்கள் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சுமார் 2000 மக்கள், வழிபாடு செய்ய இந்த இஸ்லாமிய இறை இல்லம் அமைந்துள்ளது.
தர்கா
தொகுஇந்த மசூதி 1850ல் இறந்த ஒரு முஸ்லீம் மத போதகர் ஹஸ்ரத் ஜம்ஷா வலியுல்லாஹ்(Jamesha Waliullah), நினைவாக கட்டப்பட்டது. இது பெரிய கடைத் தெருவில் மசூதியின் தெற்கு பக்கத்தில் உள்ளது. முஸ்லிம் அல்லாதவர்களும் இங்கு வழிபாடு செய்கிறார்கள். இந்தத் தெரு அமைந்துள்ள இடம் பள்ளி நிர்வாகிகளால் மாநகராட்சிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டதாகும். இது இன்று நகரின் முக்கிய வணிக மையமாக வளர்ந்துள்ளது.
ஜமாத்தின் வாரிசுகள்
தொகுஇந்த ஜமாத்தில் திருநெல்வேலியில் இருந்து 1850ல் குடிபெயர்ந்த 52 குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ளனர். மொத்தம் 1355 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளதாக ஜமாத்தின் செயலர் பசீருத்தீன் கூறுகிறார். இந்த ஜமாத்தினால் தேர்ந்தெடுக்கப்படும் செயற்குழுவினால் இப்பள்ளி, பெரிய கடைத்தெருவில் உள்ள ஜாமேஷா வலியுல்லா தர்கா, திருச்சி சாலையில் அமைந்துள்ள அசரத் ஜங்கள் பீர் தர்கா மற்றும் கோவை சந்திப்பு நிலையத்திற்கு பக்கத்திலுள்ள மையவாடி போன்றவை நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் ஜமாத்தின் சார்பாக மூன்று பள்ளிகளும் நடத்தப்படுகின்றன, இவற்றில் 1200 மாணவர்கள் பயில்கின்றனர். ஜமாத்தின் நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்கான தகுதியுள்ள வாக்காளர்களின் பட்டியலை ஜமாத் முழுவிவரங்களுடன் பராமரிக்கிறது. இந்த தேர்தல் முறையானது 1920 முதல் பின்பற்றப்பட்டு வருவதை நீதிமன்ற ஆவணங்கள் உறுதி செய்கின்றன.
சிறப்பு தொழுகை நாட்களில் இங்கு 2000 நபர்கள் வரை தொழுகையில் கலந்து கொள்கின்றனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.coimbatore365.com/tourist_attractions_in_coimbatore/temples/athar_jamath_majeed_coimbatore.html
- ↑ "Metro Plus Coimbatore : The Big Mosque". The Hindu. 2009-09-03. Archived from the original on 2013-04-12. பார்க்கப்பட்ட நாள் 2014-02-24.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)