அத்தியான் பாலா மாவட்டம்

அத்தியான் பாலா மாவட்டம் (Hattian Bala District), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் அத்தியான் பாலா ஆகும். உருது மொழி அலுவல் மொழியாக இருப்பினும், இம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையாக பகாரி மொழி, கோஜ்ரி மொழி, காஷ்மீரி மொழிகளைப் பேசுகின்றனர்.[1][2]

அத்தியான் பாலா மாவட்டம்
ضلع ہٹیاں بالا
பாகிஸ்தானின் ஆசாத் காஷ்மீர் வரைபடத்தில் அத்தியான் பாலா மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தானின் ஆசாத் காஷ்மீர் வரைபடத்தில் அத்தியான் பாலா மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடுபாகிஸ்தான்
பிரதேசம்ஆசாத் காஷ்மீர்
வருவாய் கோட்டம்முசபராபாத்
தலைமையிடம்அத்தியான் பாலா
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • நிலம்854 km2 (330 sq mi)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்230,529
 • அடர்த்தி270/km2 (700/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது
 • பேச்சு மொழிகள்பகாரி மொழி, கோஜ்ரி மொழி, காஷ்மீரி மொழி
தாலுகாக்கள்3

புவியியல் தொகு

அத்தியான் பாலா மாவட்டத்தின் வடக்கிலும், கிழக்கிலும் இந்தியாவின் குப்வாரா மாவட்டம் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களும், தெற்கில் பாக் மாவட்டமும், மேற்கில் முசாஃபராபாத் மாவட்டம் எல்லைகளாகக்க் கொண்டுள்ளது. 2017 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மக்கள் தொகை 2,30,529 ஆக உள்ளது.[3]

பொருளாதாரம் தொகு

இம்மாவட்ட மக்களில் 90% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். வேளாண்மை, கால்நடை மேய்த்தல், காட்டியல் நம்பி வாழ்கின்றனர். ஜீலம் ஆறு பாயும் மலைப்பகுதியில் இம்மாவட்டம் அமைந்துள்ளதால், புனல் மின் நிலையங்கள் அதிகம் கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் தொகு

அத்தியான் பாலா மாவட்டம் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.[4]அவைகள்:

  • சிக்கார் வட்டம்
  • அத்தியான் பாலா வட்டம்
  • லீப்பா வட்டம்

மேலும் இம்மாவட்டம் 12 ஒன்றியக் குழுக்களையும், அத்தியான் பாலா எனும் ஒரு நகராட்சியையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு