பாக் மாவட்டம்

பாக் மாவட்டம் (Bagh District), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியின் 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பாக் நகரம் ஆகும். 770 [[சதுர கிலோ மீட்டர்] பரப்பளவு[3] கொண்ட பாக் மாவட்டத்தின், 2017 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 3,71,919 ஆகும்.[4] இம்மாவட்டதின் அலுவல் மொழி உருதுவாக இருப்பினும், மக்கள் பகாரி மொழி மற்றும் குஜ்ஜர் மொழிகளைப் பேசுகின்றனர். உருது மொழியில் பாக் என்பதற்கு தோட்டம் என்று பொருள். இம்மாவட்டத்தில் பாக் கோட்டை உள்ளது.[5]

பாக் மாவட்டம்
ضلع باغ
மாவட்டம்
கங்கா சோட்டி, பாக் மாவட்டம், ஆசாத் காஷ்மீர்
கங்கா சோட்டி, பாக் மாவட்டம், ஆசாத் காஷ்மீர்
பாகிஸ்தான் நாட்டின் ஆசாத் காஷ்மீர் பகுதியில் அமைந்த பாக் மாவட்டம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் ஆசாத் காஷ்மீர் பகுதியில் அமைந்த பாக் மாவட்டம் (சிவப்பு நிறத்தில்)
நாடுபாகிஸ்தான்
பிரதேசம்ஆசாத் காஷ்மீர்
வருவாய் கோட்டம்பூஞ்ச்
தலைமையிடம்பாக் நகரம்
அரசு
 • வகைDistrict Administration
பரப்பளவு
 • மொத்தம்770 km2 (300 sq mi)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்3,71,919
 • அடர்த்தி483/km2 (1,250/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது[2]
 • பேச்சு மொழிகள்பகாரி மொழி, குஜ்ஜர் மொழி
தாலுகாக்கள்5

அமைவிடம்

தொகு

பாக் மாவட்டத்தின் வடக்கில் முசாஃபராபாத் மாவட்டம், அத்தியான் பாலா மாவட்டம் மற்றும் இந்தியாவில் பாரமுல்லா மாவட்டங்களும், கிழக்கில் அவேலி மாவட்டம், தெற்கில் பூஞ்ச் மாவட்டமும், மேற்கில் ராவல்பிண்டி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு
 
தீர்கோட் பூங்கா, பாக் மாவட்டம்

பாக் மாவட்டம் 5 தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:[1]

  • பாக் தாலுகா
  • தீர்கோட் தாலுகா
  • ஹரி கெல் தாலுகா
  • ரெரா தாலுகா
  • பீர்பனி தாலுகா

புவியியல்

தொகு

பீர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்த பாக் மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 2500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் உயரமான ஹாஜி-பீர் கணவாய் 3421 மீட்டர் உயரத்தில் உள்ளது. இம்மாவட்டம் மலைக்காடுகளால் சூழ்ந்துள்ளது.[6]

தட்பவெப்பம்

தொகு

பாக் மாவட்டத்தின் வெப்பம் சாதாரனமாக 2 °C முதல் 40 °C வரை இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Bagh District on AJK map". ajk.gov.pk. AJK Official Portal. Retrieved 17 November 2019.
  2. Rahman, Tariq (1996). Language and politics in Pakistan. Oxford University Press. p. 226. ISBN 978-0-19-577692-8.
  3. Bagh District Statistics
  4. "Census 2017: AJK population rises to over 4m" (in en-US). The Nation. http://nation.com.pk/national/27-Aug-2017/census-2017-ajk-population-rises-to-over-4m. 
  5. [1] பரணிடப்பட்டது 2011-02-09 at the வந்தவழி இயந்திரம்
  6. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2010-01-18.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்_மாவட்டம்&oldid=3606756" இலிருந்து மீள்விக்கப்பட்டது