அத்திவெட்டி சௌந்தரேஸ்வரசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

அத்திவெட்டி சௌந்தரேஸ்வரசுவாமி கோயில் (Arulmigu Sowndareswaraswamy Temple) தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், அத்திவெட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சௌந்தரேஸ்வரசுவாமி கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):பையூர்கோட்டம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:அத்திவெட்டி, பட்டுக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பட்டுக்கோட்டை
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:சௌந்தரேஸ்வரர்
தாயார்:அறம்வளர்த்தநாயகி, சௌந்தரநாயகி
குளம்:திருக்குளம்
சிறப்புத் திருவிழாக்கள்:மஹா சிவராத்திரி ,ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், கார்த்திகை அஷ்டமி , ஆருத்ரா தரிசனம்
உற்சவர் தாயார்:ஶ்ரீ பெரியநாயகி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:சோழர் காலக் கல்வெட்டுகள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

தலம் பஞ்சபூதலிங்கம் வழிபாடு ஐந்து ஆலயம் தனிதனியாக உள்ளது

மூலவர் - ஶ்ரீ சௌந்தரேஷ்வர் பெரியனழகிய பெருமான் ஆகயலிங்கம் தாயார் சௌந்திரநாயகி, அறம்வழர்தநாயகி

தலதீர்தம் - திருகுலம் தீர்தகிணறு இரண்டு உள்ளது

தல மரம் - இலுப்பை மரம் அத்திமரம்

இத்தல மூலவர் பிரம்மா பஞ்பூதலிங்கம் செய்து வழிப்பட்டர்(இங்கு வணங்கிய நிலையில் பிரம்மா தனி சன்னதியில் உள்ளார் மேலும் இத்தல இறைவன் மீது திருஞானசம்பந்தர் படல் பாடி உள்ளார் ஆலயம் சிதிலம் அடைந்தால் பாடல் சிதைந்து போனது பாடல் தேடப்பட்டு வருகிறது (கல்வெட்டு உள்ள ஆலயம் )

பின் பல்லவ மன்னார் பஞ்சபூதலிங்கற்கு ஐந்து ஆலயம்எழுப்பினர் களப்பிறர் படை எடுப்பாள்ஆலயம் அளிக்கப்பட்டு பின் கருவூரார் ஆனைபடி இந்த ஆலயம் ஶ்ரீ ராஜ ராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன் புதுபிக்கப்பட்டது ஶ்ரீராஜேந்திர சோழனுக்கு பெயர் சூட்டும் விழா இங்கு நடந்தது என்பதை கல்வெட்டு சான்றாக உள்ளது ஆலயத்தில் நான்கு கல்வெட்டுகள் உள்ளது மற்றவை சிதிலம் அடைந்த நிலையில் உள்ளது.[சான்று தேவை]

ராஜேந்திர சோழன் இத்தல இறைவனை பிராத்தனை செய்து குழந்தை செல்வம் பெற்றார்

இந்த ஆலயம் தொடர்பான குறிப்பு கல்வெட்டுக்கள் தஞ்சைபெரிய கோவில் ,திரு காளத்தி, உத்திரகோசமங்கையில் உள்ளது இக் கல்வெட்டு ஆய்வில் உள்ளது

இங்கு உள்ள லிங்கம் மற்றும் நந்தி பல்லவர் காலத்தை சேர்ந்தவை இந்த ஆலயம் பல்வர்களாள் கட்டப்பட்டு பின் வந்த சோழர்கள் புதுப்பித்தனர் என்பது அகழ்வாய்வு மற்றும் தொல்லியல் துறையின் அறிக்கை

பல்லவர்கள் தங்கள் ஆச்சி பகுதியை 24 கோட்டங்களாகப் பிரித்து ஆச்சி செய்தனர் இந்த ஆலய கல்வெட்டில் பையூர்கோட்டம் என்பது ஊரின் பெயர் இந்த ஊர் பல்லவ 24 கோட்டங்களில் ஒன்று சான்றாக கல்வெட்டு உள்ளது

இக்கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

முழுவதும் சிதிலம் அடைந்த.நிலையில் இக்கோயிலில் சௌந்தரேஸ்வரர், அறம்வளர்த்தநாயகி,சௌந்திரநாயகி விநாயகர், முருகன், பைரவர் நந்தி ஆகிய சன்னதி மட்டும் உள்ளது நாவகிரக சன்னதி இல்லை . இங்குக் கோயில் தீர்தகுலம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)