அந்த நாள்

சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(அந்தநாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம்.[1] இத்திரைப்படம் அகிர குரோசவாவின் "ரசோமன்" என்னும் திரைப்படத்தின் திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது. ஜாவர் சீதாராமன் திரைக்கதையையும் எழுதி துப்பறியும் அதிகாரியாகவும் நடித்துள்ளார். பண்டரிபாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த நாள்
இயக்கம்சுந்தரம் பாலச்சந்தர்
தயாரிப்புஏ வி எம்
கதைஜாவர் சீதாராமன்
இசைஏ வி எம் இசைக்குழு
நடிப்புசிவாஜி கணேசன்
பண்டரிபாய்
ஒளிப்பதிவுமாருதி ராவ்
படத்தொகுப்புஎஸ். சூரியா
வெளியீடு1954
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படக்கதை பூட்டிய அறை மர்மப்புனைவு ஆகும். இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.[1]

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்த_நாள்&oldid=3753349" இலிருந்து மீள்விக்கப்பட்டது