அந்தமான் பச்சைப் புறா

அந்தமான் பச்சைப் புறா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தெரெரான்
இனம்:
தெ. குளோராப்டெரசு
இருசொற் பெயரீடு
தெரெரான் குளோராப்டெரசு
பிளைத், 1845

அந்தமான் பச்சைப் புறா (Andaman green pigeon) தெரெரான் குளோராப்டெரசு) என்பது தெரெரான் பேரினத்தைச் சேர்ந்த ஒரு புறா ஆகும். இது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காணப்படுகிறது. பல வகைப்பாட்டியலாளர் இதனைச் சாம்பல் நெற்றிப் புறா தொகுப்பிருந்து இனம் பிரித்தனர். இது ஜூலை 2014-ல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் சேர்க்கப்பட்டது.

நடத்தை

தொகு

அந்தமான் பச்சைப் புறா பொதுவாக தனித்தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். இது வேகமாகவும் நேரடியாகவும் பறக்கக்கூடியது. வழக்கமான அசைவுகளுடன் வேகமாக இறக்களை அசைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் புறா பலவகையான தாவரங்களின் விதைகளையும் பழங்களையும் உண்ணும். மரத்தில் குச்சிகளைக் கொண்டு கூடு கட்டி, வெள்ளை முட்டைகள் இரண்டு வரை இடுகிறது .

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2017). "Treron chloropterus". IUCN Red List of Threatened Species 2017: e.T22726279A118274190. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22726279A118274190.en. https://www.iucnredlist.org/species/22726279/118274190. பார்த்த நாள்: 11 November 2021. 
  • Collar, N.J. 2011. Species limits in some Philippine birds including the Greater Flameback Chrysocolaptes lucidus. Forktail number 27: 29–38.
  • Rasmussen, P.C., and J.C. Anderton. 2005. Birds of South Asia: the Ripley guide. Lynx Edicions and Smithsonian Institution.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_பச்சைப்_புறா&oldid=3773577" இலிருந்து மீள்விக்கப்பட்டது