அந்தமான் பாறு-ஆந்தை
அந்தமான் பாறு-ஆந்தை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுட்ரிக்கிபார்மிசு
|
குடும்பம்: | இசுட்ரிகிடே
|
பேரினம்: | நினாக்சு
|
இனம்: | நி. அபினிசு
|
இருசொற் பெயரீடு | |
நினாக்சு அபினிசு பியாவன், 1867 |
அந்தமான் பாறு-ஆந்தை (Andaman hawk-owl) அல்லது அந்தமான் பூபுக் (நினாக்சு அபினிசு ) என்பது இசுட்ரிகிடே குடும்பத்தினைச் சார்ந்த ஆந்தை சிற்றினமாகும். இது அந்தமான் தீவுகளில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரி ஆகும்.
உயிரியல்
தொகுஅந்தமான் பாறு ஆந்தை, சிறியது முதல் நடுத்தர அளவிலான பழுப்பு ஆந்தை ஆகும். இது வட்டமான தலையினை உடையது. காதுகளில் காது கற்றை இல்லை. முக வட்டு சாம்பல் நிறமானது. கண்கள் மஞ்சள், செரி மந்தமான பச்சை நிறமுடையது மற்றும் அலகு மஞ்சள்-கொம்பு நிறமுடையது, மேல் முகடு மற்றும் நுனி வெளிறிய நிறமுடையது. இதனுடைய உடல் நீளம் 25 முதல் 28 செ.மீ. இறக்கை நீளமானது 170 மி.மீ. வரை இருக்கும்.[2]
இந்த வகை ஆந்தைகளின் இயற்கை வாழிடமாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடு மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் உள்ளன. வாழ்விட இழப்பு காரணமாக இந்த சிற்றினம் அரிதாகி வருகிறது.
உணவு
தொகுஅந்தமான் பாறு ஆந்தை முக்கியமாக பூச்சிகளை உண்ணுகின்றது. இந்த ஆந்தை பறக்கும் போது அந்துப்பூச்சிகளையும் வண்டுகளையும் வேட்டையாடுகிறது.
படக்காட்சி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International. 2017. Ninox affinis. The IUCN Red List of Threatened Species 2017: e.T22689420A118443805. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22689420A118443805.en. Downloaded on 01 January 2019.
- ↑ Lewis, Deane. "Andaman Hawk Owl (Ninox affinis) - Information, Pictures, Sounds". The Owl Pages (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-06.