அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் காடுகள் மற்றும் தோட்ட வளர்ச்சிக் கழகம்

இந்திய நிறுவனம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் காடு மற்றும் தோட்ட வளர்ச்சிக் கழகம் (Andaman and Nicobar Islands Forest and Plantation Development Corporation) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இந்திய அரசாங்கம் நிறுவிய ஒரு பொதுத்துறை நிறுவனமாகும் . [1] இந்தியாவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் ஒன்றியப் பிரதேசங்களில் வன வளங்களை ஏற்படுத்தி இக்கழகம் நிர்வகிக்கிறது. [1] [2]

வரலாறு தொகு

அரசுக்கு சொந்தமான இந்நிறுவனம் [1] 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.. இதன் தலைமையகம் போர்ட் பிளேயரில் இருந்தது. இந்த தீவுகளின் பொருளாதாரம் வெப்பமண்டல மழைக்காடுகள் சார்ந்த தொழில்களின் வளர்ச்சியைச் சார்ந்து இருந்ததாகக் கருதப்பட்டது. [1]

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் காடு மற்றும் தோட்ட வளர்ச்சிக் கழகம் முதன்மையாக காடுகளின் அறுவடை மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டது. மரம் வெட்டும் தொழில் நிலையான மகசூல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மேலும் தீவின் மழைக்காடு சுற்றுச்சூழலுக்கு இடையூறுகளைக் குறைப்பதையும், பாதுகாப்பான தங்குமிடங்களுக்கான இயற்கை மீளுருவாக்கம் நுட்பத்தையும் இவ்வமைப்பு பயன்படுத்துகிறது.[1]

அந்தமான் தீவுகளில் உள்ள சிவப்பு எண்ணெய் பனை மற்றும் ரப்பர் தோட்டங்களையும் நிர்வகித்து வந்தது. [1]

2001 ஆம் ஆண்டு முதல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் காடு மற்றும் தோட்ட வளர்ச்சிக் கழகம் ஒட்டுமொத்த நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக இருந்தது. [3] இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. [3]

2017 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் ,அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் காடு மற்றும் தோட்ட மேம்பாட்டுக் கழகத்தை மூடுவதற்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு இந்திய அமைச்சரவை இறுதி ஒப்புதல் அளித்தது. [3]

மேற்கோள்கள் தொகு