அந்தாரா தேவ் சென்

அந்தாரா தேவ் சென் (Antara Dev Sen பிறப்பு 1963) ஒரு பிரித்தானிய-இந்திய பத்திரிகையாளர் ஆவார்.

அந்தாரா தேவ் சென்
2013இல் நடைபெற்ற கொல்கத்தா இலக்கிய சந்திப்பில்
பிறப்பு1963 (அகவை 60–61)
கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து
பணிஎழுத்தாளர், பத்திரிகையாளர்
பெற்றோர்அமர்த்தியா சென்
நபநீத தேவ் சென்
வாழ்க்கைத்
துணை
பிரதீக் கஞ்சிலால்

சுயசரிதை

தொகு

அந்தாரா இங்கிலாந்தின் கேம்பிரிட்சுவில் பிறந்து டெல்லியிலும் பின்னர் கொல்கத்தாவிலும் தனது பள்ளிப்படிப்பை இந்தியாவிலும் (கொல்கத்தா) அமெரிக்காவிலும் படித்தார். சென் கல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள சுமித் கல்லூரி மற்றும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் படித்தார் . பின்னர் ஹிந்துஸ்தான் டைம்ஸில் சேர்ந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸின் மூத்த தலைமை தொகுப்பாசிரியராக, ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையின் ஆய்வுதவுத் தொகை மூலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். இவர் கல்கத்தாவில் உள்ள ஆனந்த பஜார் பத்ரிகா குழுமத்திலும், தில்லியில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார், அங்கு மூத்த உதவி ஆசிரியராக இருந்தார்.

தில்லி திரும்பிய இவர் தி லிட்டில் இதழைத் தொடங்கி அதன் நிறுவன தலைமை தொகுப்பாசிரியராகவும் இருந்தார். [1] இந்த இதழ் பெரும்பாலும் தெற்காசியா தொடர்பான இலக்கியக் கருப்பொருள்கள் பற்றிய கட்டுரைகளை வெளியிடுகிறது. இவர் ஓர் இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர், செய்தித்தாள் கட்டுரையாளர் மற்றும் ஊடகம், சமூகம், அரசியல், கலாச்சாரம் மற்றும் வளர்ச்சி பற்றிய வர்ணனையாளர் ஆவார். தெற்காசியா தொடரில் இருந்து TLM சிறுகதைகள் உட்பட பல புத்தகங்களை அவர் பதிப்பாசிரியராக இருந்துள்ளார். [2]

கல்வி மற்றும் சுகாதாரத்தில் பணிபுரியும் அறக்கட்டளையான பிரதிச்சியின் நிர்வாக அறங்காவலராக சென் உள்ளார். [3]

சான்றுகள்

தொகு
  1. "About TLM". The Little Magazine.
  2. "Antara Dev Sen". The DSC prize for South Asian Literature. Archived from the original on 2016-12-28. பார்க்கப்பட்ட நாள் 2022-01-28.
  3. "Trustees of Pratichi Trust".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தாரா_தேவ்_சென்&oldid=3800172" இலிருந்து மீள்விக்கப்பட்டது