அந்தோணி டி சா
இந்திய அரசியல்வாதி
அந்தோணி (தினோ) டி சா (Anthony de Sa) என்பவர் ஓர் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் கவி எழுத்தாளரும் ஆவார். தற்போது இவர் தனது சொந்த ஊரான கோவாவில் உள்ளார். இவர் மாபுசா நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் (MUCB) கலைபலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1980ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி குழுவைச் சேர்ந்தவர்.[1] இவர் புசாவல் நகரத்தில் உள்ள புனித அலோசியஸ் பள்ளியில் கல்வியைப் பயின்றார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் 1976-ல் கல்லூரியின் சிறந்த மாணவருக்கான சுழல் கழக விருதைப் பெற்றவர். இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]
அந்தோணி டி சா Anthony de Sa | |
---|---|
அந்தோணி டி சா அமிர்கானுடன் | |
29வது தலைமைச்செயலர் மத்தியப் பிரதேசம் | |
பதவியில் 17 பிப்ரவரி 2016 – 1 நவம்பர் 2017 | |
முன்னையவர் | ஆர். பரசுராம் |
பின்னவர் | பசந் பிரதாப் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 அக்டோபர் 1956 புசவால், மகாராட்டிரா |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | மவுல்சா டி சா |
முன்னாள் கல்லூரி | மும்பை பல்கலைக்கழகம் புனித சவேரியார் கல்லூரி, மும்பை |
வேலை | இந்திய ஆட்சிப் பணி அதிகாரி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Executive Record Sheet Generator (IAS Officers)". 4 January 2015 இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150202003806/http://persmin.nic.in/ersheet/MultipleERS.asp?HiddenStr=01MP032400.
- ↑ "Antony JC DeSa is new MP CS". 18 September 2014. http://www.dailypioneer.com/state-editions/bhopal/antony-jc-desa--is-new-mp-cs.html.