அனம் விவேகானந்த ரெட்டி

இந்திய அரசியல்வாதி

அனம் விவேகானந்த ரெட்டி (Anam Vivekananda Reddy) அனம் விவேகா என்றும் அழைக்கப்படும் இவர், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். பின்னர், 2016 இல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.

அனம் விவேகானந்த ரெட்டி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னையவர்தொகுதி உருவாக்கப்பட்டது
பின்னவர்கோட்டம்ரெட்டி சிறீதர் ரெட்டி
தொகுதிநெல்லூர் ஊரகத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1999–2009
முன்னையவர்தல்லப்பாக்க ரமேசுரெட்டி
பின்னவர்முங்கமுரு சிறீதர கிருஷ்ண ரெட்டி
தொகுதிநெல்லூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-12-23)23 திசம்பர் 1950
சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு25 ஏப்ரல் 2018(2018-04-25) (அகவை 67)
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (2015 வரை) பின்னர் தெலுங்கு தேசம் கட்சி
துணைவர்ஹேமாவதி
பிள்ளைகள்ஆனம் சஞ்சு சுப்பா ரெட்டி, ஆனம் ரங்கா மயூர் ரெட்டி
இணையத்தளம்https://www.facebook.com/viveka.anam

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர், அனம் வெங்கட ரெட்டி என்பவருக்கு மகனாக நெல்லூரில் பிறந்தார். இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்தில் ஆந்திர பிரதேசத்தின் அரசியல் தலைவரான மறைந்த அனம் செஞ்சு சுப்பா ரெட்டியின் மருமகன் ஆவார். அனம் ராமநாராயண ரெட்டி எ. சா. ராஜசேகர் மற்றும் கொனியேட்டி ரோசையா ஆகியோரின் அமைச்சரவையில் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சராகவும், கிரண் குமார் ரெட்டியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் இருந்த அனம் ராமநாராயண ரெட்டியின் சகோதரர் ஆவார். விவேகா நெல்லை விஆர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

தொழில்

தொகு

விவேகானந்த ரெட்டி ஆந்திர சட்டசபைக்கு மூன்று முறை சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லை மாவட்ட நில அடமான வங்கியின் தலைவராகவும் (1982), நெல்லூர் நகராட்சியின் துணைத் தலைவராகவும் (1982), நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

இறப்பு

தொகு

அனம் விவேகானந்த ரெட்டி நீண்ட நாள் உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் 25 ஏப்ரல் 2018 அன்று காலமானார். [1] [2] [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Naidu pays his last respects to Vivekananda Reddy". 27 April 2018. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/naidu-pays-his-last-respects-to-vivekananda-reddy/article23687991.ece. 
  2. "Anam Viveka hospitalised". 3 March 2018.
  3. https://timesofindia.indiatimes.com/toierrorfound.cms?url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fcity%2Famaravati%2Ftelugu-desam-party-leader-anam-vivekananda-passes-away%2Famp_articleshow%2F63907237.cms. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனம்_விவேகானந்த_ரெட்டி&oldid=3819163" இலிருந்து மீள்விக்கப்பட்டது